பிராட்லி மானிங்
பிராட்லி எட்வேர்ட் மானிங் (ஆங்கிலம்: Bradley Edward Manning, பிறப்பு டிசம்பர் 17, 1987) ஒரு ஐக்கிய அமெரிக்கப் படைவீரர். இவர் ஐக்கிய அமெரிக்கப் படைத்துறையின் பல்வேறு செயற்பாடுகள் பற்றிய இரகசிய தகவல்களை விக்கிலீக்சு மற்றும் ஊடகங்கள் மூலம் வெளியிட்டார். இத் தகவல்கள்களில் ஐக்கிய அமெரிக்கப் படைத்துறை செய்த பல்வேறு சட்டத்துக்குப் புறம்பான செயற்பாடுகள் பற்றிய விபரங்கள் அடங்கியுள்ளன. இவரது வெளியீடுகள் அரபு இளவேனிலுக்கு ஒரு வினையூக்கியாக அமைந்ததாக சிலர் கருத்துக் கூறி உள்ளார்கள்.
இவரை ஐக்கிய அமெரிக்க அரசு மே 2010 இல் கைது செய்து 2013 இல் வழக்கு 20 குற்றச்சாட்டுக்களில் குற்றவாளியாகக் காணப்பட்டார்.[1] இவர் 136 ஆண்டுகள் வரையான சிறைத் தண்டனை வரை எதிர்நோக்கியுள்ளார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Manning, Chelsea E. (May 27, 2015). "The years since I was jailed for releasing the 'war diaries' have been a rollercoaster". The Guardian. https://www.theguardian.com/commentisfree/2015/may/27/anniversary-chelsea-manning-arrest-war-diaries.