பிராணஹிதா ஆறு
பிராணஹிதா ஆறு (Pranhita River), இந்தியாவில் பாயும் முக்கியமான ஆறுகளுள் ஒன்றாகும்.
துணையாறு
தொகுஇது கோதாவரி ஆற்றின் பெரிய துணையாறு ஆகும்.[1] பைன்கங்கை ஆறு, வர்தா ஆறு ஆகிய இரண்டு ஆறுகளின் நீரும் இணைந்த நிலையில் இந்த ஆற்றின் நீர் காணப்படுகிறது. பரந்த அளவிலான இவை துணையாறுகளாக மகாராட்டிர மாநிலத்தின் விதர்பா பகுதியிலும் சாத்பூரா மலைத்தொடரின் தென் பகுதியையும் வளப்படுத்துகின்றன. இந்தியாவில் காணப்படுகின்ற ஏழாவது பெரிய துணை வடிநிலமாக இந்த ஆறு உள்ளது. [2] measuring about 1,09,078 km2 குறிப்பிடத்தக்க ஆறுகளான நர்மதை மற்றும் காவிரியின் தனித்த வடிநிலத்தைவிட பெரிதாக காணப்படுகிறது.
பிறப்பிடம்
தொகுவார்தா ஆறும், (நீர்ப்பாசனப் பகுதி: 46,237 கிமீ2) வைன்கங்கா ஆறும் (நீர்ப்பாசனப் பகுதி:49,677 கிமீ2) சங்கமிக்கும் இடத்தில் இந்த ஆறு தொடங்குகிறது. இந்த சங்கமிக்குமிடமானது மகாராட்டிரம் மற்றும் தெலுங்கானா மாநிலங்களுக்கிடையே கௌதாலா (சிர்பூர் ககஸ்நகர் அருகே) அமைந்துள்ளது. அகன்ற படுகையைக் கொண்டுள்ளது.
ஆற்றின் போக்கு
தொகுஇந்த ஆறு சுமார் 113 கிமீ தூரம் ஓடுகிறது. இறுதியில் கோதாவரியில் கலக்கிறது.
அணை
தொகுஇதுவரை இந்த ஆற்றில் அணை கட்டப்படவில்லை. இருப்பினும் ரூ.38,500 கோடியில் மதிப்பீட்டில் ஒரு குறுக்கணை கட்டுவதற்கான திட்டம் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.[3]
பயன்பாடு
தொகுசிரோன்சா மற்றும் காளீஸ்வரம் இடையே நீர்ப் போக்குவரத்திற்கு இந்த ஆறு பயன்படுகிறது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகின்ற புஷ்கரம் விழா இங்கும் நடைபெறுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Integrated Hydrological Databook (Non-Classified River Basins)" (PDF). Central Water Commission. மார்ச் 2012. Archived from the original (PDF) on 2016-03-04. Retrieved 2015-10-12.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-09-23. Retrieved 2017-08-31.
- ↑ "Submergence, irrigation issues continue to dog Pranahita project". Thehindu.com. Retrieved 20 August 2017.