பிராதமா இரத்த மையம்
பிராதமா இரத்த மையம் (Prathama Blood Centre) இந்தியாவின் அகமதாபாத்து நகரத்தில் அமைந்துள்ள ஓர் இரத்த வங்கியாகும். 2000 ஆம் ஆண்டில் அகமதாபாத் மாநகராட்சி ஆணையமு மேம்பட்ட மாற்று மருந்து ஆராய்ச்சி அறக்கட்டளையும் இணைந்து இலாப நோக்கற்ற தன்னார்வ அமைப்பாக இது நிறுவப்பட்டது. பிராதமா இரத்த மையம் இந்தியாவின் முதல் முழு தானியங்கு இரத்த மையமாகும்.[2] சுமார் 50,000 தன்னார்வ இரத்த தானம் செய்பவர்கள் பிராதாமாவில் ஆண்டுதோறும் இரத்த தானம் செய்கிறார்கள்.[3]
உருவாக்கம் | 2000 |
---|---|
வகை | இலாப நோக்கற்ற அமைப்பு |
நோக்கம் | இரத்த வங்கி |
தலைமையகம் | |
சேவை பகுதி | குசராத்து |
வலைத்தளம் | प्रथमा |
2016 ஆம் ஆண்டின் உலக தலசீமியா நாளன்று பிராதமா மையம், இரத்தம் பெறும் நபர்களுக்கு மாற்றப்படும் பரவும் நோய்த்தொற்றுகளின் அபாயத்தைக் குறைப்பதற்காக தானம் செய்யப்பட்ட இரத்தத்தில் உட்கரு அமில சோதனை மேற்கொள்ளுவதை அறிமுகம் செய்தது. இடைக்காலத்திற்கு பரிசோதிக்கப்படாத பாதுகாப்பற்ற இரத்தத்தை மாற்றுவதால் வைரசு தொற்றுநோய்களும் இரத்த மாற்றத் தொற்றுநோய்களும் பரவும் ஆபத்து அதிகரிக்கலாம். சில நேரங்களில் உயிருக்கு ஆபத்தாகவும் இருக்கலாம். இத்தகைய இடைக்கால நோய்த்தொற்றுகளைக் கண்டறிவதில் உட்கரு அமில பரிசோதனை பயனுள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. சீரான இடைவெளியில் இரத்தம் தேவைப்படும் தலசீமியா நோயாளிகளுக்கு பாதுகாப்பான இரத்தம் உயிர் காக்கும் மருந்தாக முக்கியத்துவம் வகிக்கிறது. இந்தியாவில் தலசீமியா பாதிப்பு 3-4% ஆக உள்ளது. ஒவ்வோர் ஆண்டும் 10,000 முதல் 12,000 தலசீமியா பிறப்புகள் நடைபெறுகின்றன. நாட்டில் 30 மில்லியன் தலசீமியா ஏந்திகள் இருப்பதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. உட்கரு அமில பரிசோதனை செய்யப்பட்ட இரத்தத்துடன் இந்த நோயாளிகள் நீண்ட காலம் வாழமுடியும் மற்றும் வாழ்க்கைத் தரத்தையும் பராமரிக்க முடியும்.[4]
ஆண்டொன்றுக்கு 150,000 அலகு இரத்தத்தை சேமிக்கும் வகையிலும் விரிவுபடுத்திக் கொள்ளும் வகையிலும் இரத்த மையம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பிராதமா இரத்த மையம் பிரிவு–25 வகை நிறுவனமாகவும் ஓர் அறக்கட்டளையாகவும் பதிவுசெய்யப்பட்ட இலாப நோக்கற்ற அமைப்பாகும். 100% தன்னார்வ இரத்த சேகரிப்பு மூலம் ஆண்டுதோறும் சுமார் 125,000 இரத்தம் மற்றும் இரத்தக் கூறுகள் மாற்றமின்றி இங்கு விநியோகிக்கப்படுகின்றன. 2009 ஆம் ஆண்டு சனவரி மாதம் முதல் இம்மையம் தலசீமியா எனப்படும் இரத்த அழிவுச் சோகை நோய் ஒழிப்புத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.[5][6]
மேற்கோள்கள்
தொகு- ↑ Prathama Blood Centre விக்கிமேப்பியா.
- ↑ Prathama Blood Centre பரணிடப்பட்டது 2022-02-04 at the வந்தவழி இயந்திரம் Piramal Prize.org.
- ↑ "World Blood Donor Day round up". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 14 June 2009 இம் மூலத்தில் இருந்து 2011-08-11 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110811052147/http://articles.timesofindia.indiatimes.com/2009-06-14/ahmedabad/28188753_1_blood-donation-ahmedabad-red-cross-world-blood-donor-day.
- ↑ "Roche Diagnostics India launches Gujarat's first NAT solution at Prathama Blood Centre, to enable access to safe blood". 9 May 2016.
- ↑ Thalassemia Eradication Program - an Initiative of Prathama Blood Centre,Ahmedabad பரணிடப்பட்டது 2011-07-14 at the வந்தவழி இயந்திரம்.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-08-10. பார்க்கப்பட்ட நாள் 2022-02-04.