பிரான்சஸ் மரியன்

பிரான்சஸ் மரியோன் (ஆங்கிலம்: Frances Marion, பி: நவம்பர் 18, 1888[1] - இ: மே 12,1973) புகழ்பெற்ற அமெரிக்கப் பெண் திரைக்கதை எழுத்தாளர், பத்திரிகையாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார். அவர் இரண்டு அகாடமி விருதுகளைப் பெற்ற முதல் நபர் ஆவார்[2]. 20 ஆம் நூற்றாண்டின் மிகச்சிறந்த பெண் திரைக்கதை ஆசிரியராக இவரும், ஜூன் மதிஸ் மற்றும் அனிதா லூஸ் ஆகியோரும் குறிப்பிடப்படுகின்றனர்.

பிரான்சஸ் மரியோன்
Frances Marion 1918.JPG
பிரான்சஸ் மரியோன்,1918
பிறப்புமரியன் பென்சன் ஒவேன்ஸ்
நவம்பர் 18, 1888(1888-11-18)
சான் பிரான்சிஸ்கோ, ஐக்கிய அமெரிக்கா.
இறப்புமே 12, 1973(1973-05-12) (அகவை 84)
லாஸ் ஏஞ்செல்ஸ்
பணிதிரைக்கதை எழுத்தாளர், பத்திரிகையாளர் மற்றும் எழுத்தாளர்
செயற்பாட்டுக்
காலம்
1912–1972
வாழ்க்கைத்
துணை
[பிரெட் சி. தோம்சன் (1919–1928)
ஜார்ஜ் டபிள்யு.ஹில் (1930–1933)

கலிபோர்னியாவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் பிறந்த இவர் முதலாம் உலகப் போரின் போது அமெரிக்காவிற்கான பத்திரிக்கையாளராக பல நாடுகளிலும் பணியாற்றினார்[3]. அதன் பின்னர் திரைக்கதை ஆசிரியரான இவர் தி பிக் ஹவுஸ் மற்றும் தி சாம்ப் ஆகிய திரைப்படங்களுக்காக அகாடமி விருதுகளை பெற்றிருக்கிறார். இவர் தனது வாழ்நாளில் எழுதிய 300 கதைகளில் 140 க்கும் மேற்பட்டவை திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளன.

மேற்கோள்கள்தொகு

  1. Beauchamp. 1997
  2. http://oscar.go.com/oscar-history/year/1934
  3. Biography.com. "Frances Marion Biography". ஆகஸ்ட் 7, 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது. May 7, 2011 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரான்சஸ்_மரியன்&oldid=3563567" இருந்து மீள்விக்கப்பட்டது