பிரான்மலைக் குடைவரை கோயில்

தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்திலுள்ள ஒரு குடைவரைக் கோயில்
(பிரான்மலைக் குடைவரை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பிரான்மலைக் குடைவரை கோயில், சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டத்தில் சிங்கம்புணரிக்கு அண்மையில் உள்ள பிரான்மலையில் அமைந்துள்ள ஒரு குடைவரை கோயில். கிபி 9 ஆம் நூற்றாண்டில் தொடக்ககாலப் பாண்டியர்களால் அமைக்கப்பட்டது. இது ஒரு சிறிய குடைவரை கோயில். பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமான இக்கோயில் குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனத்தின் கீழ் உள்ளது.[1][2]

அமைப்பு

தொகு

பிரான்மலையில் கிழக்குத்திசை நோக்கிக் குடையப்பட்டுள்ள இக்குடைவரை, பாண்டியர் காலத்தைச் சேர்ந்த சிறிய குடைவரைகளுள் ஒன்று. ஆனாலும், கருவறையுடன், இடைகழி, அர்த்த மண்டபம், முக மண்டபம் ஆகிய பகுதிகளும் இக்குடைவரையில் உள்ளன. தூண்கள் எதுவும் காணப்படவில்லை.[3]

சிற்பங்கள்

தொகு

கருவறையில் உமாதேவியும் சிவனும் புடைப்புச் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளனர். கருவறைக்கு வெளியே இருமருங்கும் பெண் வாயிற்காவலர் சிற்பங்கள் உள்ளன.

மேற்கோள்கள்

தொகு
  1. (in ta) திருமடத்துக் குடைவரைகள். 2023-12-10. https://www.hindutamil.in/news/opinion/columns/1165802-thirumadathu-kudaivaraikal.html. 
  2. Jeyaraj, V., Directory of Monuments in Tamilnadu, Director of Museum, Government of Tamilnadu, Chennai, 2005, p.173
  3. இராசவேல், சு., சேஷாத்திரி, அ. கி., தமிழ்நாட்டுக் குடைவரைக் கோயில்கள், பண்பாட்டு வெளியீட்டகம், சென்னை, 2000, பக். 169.