பிராமி எழுத்துமுறை

(பிராமி எழுத்து இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பிராமி என்பது ஒரு பழங்கால எழுத்து முறையாகும். இது பிராமி குடும்பத்தை சார்ந்த எழுத்துமுறைகளிலேயே பழையதும் மூலமுமான எழுத்துமுறையாகும். இது பழங்காலத்தில் தெற்காசியா முழுவதும் வழக்கத்தில் இருந்தது. அசோகரின் 3ஆம் நூற்றாண்டு காலத்திய கல்வெட்டுக்கள் பிராமி எழுத்துக்களிலேயே எழுதுப்பட்டுள்ளன. இது வரையிலும் பிராமி எழுத்துக்களின் மிகப்பழைய கல்வெட்டுக்கள் இவையே என்று கருதப்பட்டு வந்தது. ஆனால் அண்மையில் தமிழ் நாட்டிலும் இலங்கையிலும் கி.மு 6ஆம் நூற்றாண்டு காலத்திய கல்வெட்டுக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. எனவே பிராமி எழுத்து முறை இன்னும் பழமையானவையாக இருக்கலாம் எனக் கருத்தப்படுகிறது[1].

பிராமி
அசோகர் தூணில் பிராமி எழுத்துகள்
எழுத்து முறை வகை
காலக்கட்டம்
நிச்சயமாக கி.மு மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி மூன்றாம் நூற்றாண்டு வரை
திசைLeft-to-right Edit on Wikidata
மொழிகள்ஆதிகால பிராகிருத மொழிகள்
தொடர்புடைய எழுத்து முறைகள்
மூல முறைகள்
தோற்றுவித்த முறைகள்
குப்த எழுத்துமுறை மற்றும் பல
நெருக்கமான முறைகள்
கரோஷ்டி
 இந்தக் கட்டுரையில் பன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடிகளில் (IPA) ஒலிப்பியல் படியெடுத்தல்கள் உள்ளன. IPA குறியீடுகள் பற்றிய அறிமுக வழிகாட்டிக்கு, உதவி:IPA பார்க்கவும். [ ], / / and ⟨ ⟩ இடையே உள்ள வேறுபாட்டிற்கு, ப.ஒ.அ.§அடைப்புக்குறிகள் மற்றும் படியெடுத்தல் பிரிப்பான்களை பார்க்கவும்.

பிராமி எழுத்து முறையிலிருந்தே பெரும்பான்மையான தெற்காசிய, தென்-கிழக்காசிய மொழிகளின் எழுத்து முறை தோன்றின. தற்காலத்து இந்தோ-அரேபிய எண் முறையும், பிராமி எண் முறையிலிருந்தே தோன்றியது.

குயிலெழுத்து

நடுகல்லில் எழுதப்பட்ட எழுத்துக்களைச் சங்கப்பாடல் ஒன்று குயிலெழுத்து (குயில் எழுத்து) என்று குறிப்பிடுகிறது. [2] [3] மதுரை மருதன் இளங்கீரனார் இதனைக் குறிப்பிடுகிறார். [4] இந்த எழுத்துக்கள் இளைஞன் ஒருவனின் இளந்தாடி போல் இருந்தது என்றும் அதன் தோற்றம் காட்டப்பட்டுள்ளது. இந்த எழுத்துக்களை வழியில் செல்லும் வம்பலர் (புதியவர்கள்) படிப்பதில்லையாம். நடுகல்லில் போற்றப்படுபவன் பெயரும், அவனது செயலும் பொறிக்கப்பட்டிருக்குமாம். [5] குயிலுதல் என்ற சொல்லுக்குத் தோண்டி எடுத்தல், தோண்டிச் செதுக்குதல் என்பது பொருள் "திரு மணி குயிகாற்றுநர்" [6] "இமையச் சிமயத்து, இருங் குயிலாலுவத்து, உமை ஒரு பாகத்து ஒருவனை வணங்கி" [7] என்னும் தொடர்களால் இதனை உணரலாம். மரத்தில் குடைந்தெடுக்கப்பட்ட இசைக் கருவிகளைச் சிலப்பதிகாரம் குயிலுவக் கருவிகள் என்றும், இக் கருவிகளை இசைப்போரைக் குயிலுவ மாக்கள் என்றும் குறிப்பிடுகிறது. [8] [9] இச்சொல்லாட்சியும் குயிலுதல் என்பது என்ன என்பதை உணர்த்துகிறது.

பிராமி தோற்றம்

 
அசோகரின் ஸ்துபியின் ஒரு பகுதி.

பிராமி எழுத்துமுறையின் தோற்றம் குறித்துப் பலர் பலவிதமான கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். அவற்றுள் முக்கியமானவற்றை குறிப்பிடப்பட்டுள்ளன.

 
ஃபோனீசியன் மற்றும் பிராமி எழுத்துக்களுக்கு உண்டான ஒற்றுமை( 4 மற்றும் 5வது நெடுவரிசை). கி.மு 6ஆம் மற்றும் 4ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட அரமேய எழுத்துக்கள், இவ்விரண்டுக்கும் இடைப்பட்ட வடிவத்தை கொண்டிருந்தன(படத்தில் காட்டப்படவில்லை)

சிலர் பிராமி எழுத்துமுறை செமிட்டிக் எழுத்துமுறையான அரமேயத்திலிருந்து (Arameic) உருவாக்கப்பட்டிருக்கலாம் என கருதுகின்றனர், ஏனெனில் அக்காலத்திய வடமேற்கிந்திய கரோஷ்டி எழுத்துக்கள் அரமேயத்திலிருந்தே தோன்றின. மேலும் அரமேய மொழிக்கும் பிராகிருத மொழிகளுக்கும் பொதுவாக உள்ள ஒலிகளின்(Phenomes) அரமேய எழுத்துக்களும், ஆரம்ப பிராமி எழுத்துக்களும் ஓரளவுக்கு ஒரே மாதிரியுள்ளன.அனால் பிராகிருத மொழிகளில் காணப்படும் 'ஹ'கரம் கூடிய மெய்யெழுத்துக்கள் (ख-kha घ-gha झ-jha போன்றவை) அரமேயத்திலில்லை. அரமேயத்திற்கே உரிய ஒலிகளை குறிக்கப் பயன்படுத்தப்பட்ட எழுத்துக்கள் பிராகிருத ஒலிகளைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். மேலும் அரமேய எழுத்துக்களில் மாறுபாடு செய்யப்பட்டுச் சில பிராமி எழுத்துக்கள் உருவாக்கப்பட்டிருக்கலாம். உதாரணமாக அரமேய 'ப'வை சற்று சுழித்தால் பிராமி ப்ஹ(फ) எழுத்தைப்போலவே உள்ளது.

 
பிராமி கல்வெட்டு

ரைஸ் டேவிட் என்ற பாலி மொழி அறிஞர் பிராமி எழுத்துமுறை மத்திய ஆசிய வணிகர்களால் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கலாம் என்று கருதுகின்றார். கல்வெட்டுகளில் பொறிப்பதற்காகவே பிராமி எழுத்துமுறை அசோகரால் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் சிலர் கருதுகின்றனர்.

ஹன்டர் மற்றும் ரேமெண்ட் என்ற ஆங்கிலேய அறிஞர்கள், பிராமி எழுத்துமுறை முற்றிலும் இந்தியாவிலிருந்தே தோன்றியது எனவும், அது சிந்து சமவெளி எழுத்துக்களிலிருந்து தோன்றியிருக்கலாம் என்றும் கூறுகின்றனர். மேலும் சிலரும் இக்கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

சில தமிழ் அறிஞர்கள், பிராமி என்பது தமிழர்களது எழுத்து முறையென்றும், அதையே அசோகர் மாற்றம் செய்து பிராகிருதம் எழுதக்கூடிய எழுத்துமுறையாக உருவாக்கினார் எனக் கருதுகின்றனர்[1]. மேலும் அவர்கள் பிராமியை 'தமிழி' என அழைக்க வேண்டும் எனக் கூறுகின்றனர்.

எழுதும் முறை

 
பிராமி 'க' - உயிர்மெய்யெழுத்து வரிசை

பிராமி இடப்பக்கத்தில் இருந்து வடப்பக்கமாக எழுதப்பட்ட ஒரு அபுகிடா வகை எழுத்துமுறையாகும். மெய்யெழுத்துக்களுக்கு தனி வடிவமும், உயிரெழுத்துக்களுக்கு தனி வடிவமும், உயிர்மெய்யெழுத்துக்களை எழுத, மெய்யெழுத்துக்களுக்கு சில உயிர்க்குறி திரிபுகள் சேர்க்கப்பட்டன. கூட்டெழுத்துக்களை எழுதும் போது, ஒரு எழுத்துக்கு கீழே இன்னொரு எழுத்து இடப்படும்

 
பிராமி - திரிபுகள்

பயன்பாடு

பிராமியும், கரோஷ்டியும் தான் இந்தியாவின் பழம்பெரும் எழுத்துமுறைகள் ஆகும். கரோஷ்டி ஆப்கானிஸ்தானிலும், வடமேற்கு இந்தியாவிலும் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், பிராமியோ இந்திய துணைக்கண்டம் முழுதும் பயன்படுத்தப்பட்டு வந்தது. காலப்போக்கில் பிராமி பல எழுத்துமுறைகளோ திரிந்து விட்டது. எனினும் கரோஷ்டிடோ சுவடு ஏதும் இல்லாமல் மறைந்து போனது.

பிராமி, ஆதிகால பிராகிருத மொழிகளை எழுதபயன்படுத்தப்பட்து. பெரும்பாலும் கல்வெட்டுகளிலும், சமய நூல்களை எழுதவுமே இந்த எழுத்துமுறை பயன்படுத்தப்பட்டது. சமஸ்கிருதம் சில நூற்றாண்டுகள் கழித்தே எழுதப்பட்ட துவங்கியதால், சமஸ்கிருதத்தில் உள்ள பல ஒலிகளுக்கு(ரு,லு முதலியன்) பிராமியில் எழுத்துவடிவங்கள் கிடையாது

தோற்றுவித்த எழுத்துமுறைகள்

 
பல்வேறு காலகட்டத்தில் பிராமி எழுத்துமுறை

பிராமி எழுத்துமுறையில் இருந்து பல்வேறு எழுத்துமுறைகள் தோன்றியுள்ளன. தென்னிந்தியாவில் வட்டவடிவமாக முறையிலும்(வட்டெழுத்து, கிரந்தம் ஆகியன) வடபுலத்தில் கோணமான வடிவில் மாறியது. இப்போது, பிராமியில் இருந்து தோன்றிய எழுத்துமுறைகள் இந்தியா, வங்கதேசம், இலங்கை, நேபாளம், பூட்டான், திபெத், பர்மா, தாய்லாந்து, லாவோஸ், இந்தோனேசியாவில் சில பகுதிகள், தென் சீனா, தென் வியட்னாம் மற்றும் பிலிப்பைன்ஸ். பௌத்த நூல்களின் எழுத்துமுறையாக, பிராமிய எழுத்துமுறைகள் சீனா, கொரியா மற்றும் வியட்னாமில் பயன்பாட்டில் உள்ளன. சர்சைக்குரியதாக, கொரிய ஹங்குல் எழுத்துமுறையில் பிராமிய எழுத்துமுறையாக கருதப்படுகிறது

இன்றைய நிலை

பிராமி எழுத்து முறையை உபயோகிக்கக்கூடிய பல கணினி நிரலிகள் உருவாக்கப்பட்டுள்ளன. பிராமி எழுத்துக்களடங்கிய எழுத்துருக்களையும் பலர் உருவாக்கியுள்ளனர். பிராமி எழுத்து முறை யூனிகோடில் சேர்க்கும் கோரிக்கை யூனிகோட் குழுமத்தின் பரிசீலனையில் உள்ளது.

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

  1. http://www.orientalthane.com/archaeology/news_2004_05_31_1.htm
  2. அகநானூறு 297
  3. அகநானூறு - செய்தி பாடல் 297
  4.  
    இருங் கவின் இல்லாப் பெரும் புன் தாடி, 5
    கடுங்கண், மறவர் பகழி மாய்த்தென,
    மருங்குல் நுணுகிய பேஎம் முதிர் நடுகல்,
    பெயர் பயம் படரத் தோன்று குயில் எழுத்து
    இயைபுடன் நோக்கல் செல்லாது, அசைவுடன்
    ஆறு செல் வம்பலர் விட்டனர் கழியும் - அகநானூறு 297

  5. குயில் எழுத்து விளக்கம் - படத்துடன்
  6. சிலப்பதிகாரம், காதை 5 - மணியில் துளை செய்வோர்
  7. சிலப்பதிகாரம், காதை 28 - குயிலாலவம் - குடந்த குகை
  8. சிலப்பதிகாரம் அரங்கேற்றுக் காதை
  9. சிலப்பதிகாரம் அரங்கேற்றுக் காதை - விளக்கம்

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிராமி_எழுத்துமுறை&oldid=3391089" இலிருந்து மீள்விக்கப்பட்டது