பிரிகையுறும் விகிதம்

வேதியியல், உயிர்வேதியியல் மற்றும் மருந்தியல் ஆகியவற்றில் பிரிகையுறும் விகிதம் (Dissociation rate) என்பது ஒரு புரதத்திலிருந்து ஒரு ஏற்பிணைப்பி பிரியும் விகிதம் அல்லது வேகம் ஆகும். இது ஒரு ஏற்பியில் உள்ள ஏற்பிணைப்பியின் பிணைப்பு தொடர்பு மற்றும் உள்ளார்ந்த செயல்திறன் ஆகியவற்றில் ஒரு முக்கியக் காரணியாகும்.[1]ஒரு குறிப்பிட்ட வினை மூலக்கூறுக்கான பிரிகையுறும் வீதம் மைக்கேலிசு-மென்டென் மாதிரி உட்பட நொதி இயக்கவியலுக்குப் பயன்படுத்தப்படலாம். நொதியின் வேகம் எவ்வளவு பெரியதாக அல்லது சிறியதாக இருக்கும் என்பதற்கு வினைப்பொருள் மூலக்கூறு பிரிகையுறு விகிதம் பங்களிக்கிறது. மைக்கேலிசு-மென்டென் மாதிரியில், என்சைம் அடி மூலக்கூறுடன் பிணைந்து ஒரு நொதி அடி மூலக்கூறு அணைவுச் சேர்மத்தை அளிக்கிறது. இது பிரிகையுறுவதன் மூலம் பின்னோக்கிச் செல்லவோ அல்லது ஒரு விளைபொருளை உருவாக்குவதன் மூலம் முன்னோக்கிச் செல்லவோ செய்யலாம். பிரிகையுறுதல் விகிதம் மாறிலி K off ஐப் பயன்படுத்தி வரையறுக்கப்படுகிறது.[2]

மைக்கேலிசு-மென்டென் மாறிலி K m ஆல் குறிக்கப்படுகிறது. மேலும், K m என்பது சமன்பாடு K m = (K off + K cat )/ K on ஆல் தரப்பட்டுள்ளது. நொதி அடி மூலக்கூறிலிருந்து பிணைக்கும் மற்றும் பிரிக்கும் விகிதங்கள் முறையே K on மற்றும் K offஆகியவற்றால் குறிக்கப்படுகின்றன. K m என்பது அடி மூலக்கூறு செறிவு என வரையறுக்கப்படுகிறது, இதில் நொதியின் வேகம் அதன் அதிகபட்ச விகிதத்தில் பாதியை அடையும். [3] ஒரு ஏற்பிணைப்பி ஒரு அடி மூலக்கூறுடன் எவ்வளவு இறுக்கமாக பிணைக்கப்படுகிறதோ, அவ்வளவு குறைவாக பிரிகையுறு விகிதம் இருக்கும். K m மற்றும் K off ஆகியவை நேர் விகிதத்தில் உள்ளன. இதனால் அதிக அளவிலான பிரிகையுறல்களில், மைக்கேலிசு-மென்டன் மாறிலி பெரியதாக இருக்கும்.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரிகையுறும்_விகிதம்&oldid=3805900" இலிருந்து மீள்விக்கப்பட்டது