பிரிசசு யுனிகலர்

பிரிசசு யுனிகலர்
பிரிசசு யுனிகலர் உரை, கிரிசு
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
இசுபேடன்கொய்டா
குடும்பம்:
பேரினம்:
இனம்:
பி. யுனிகலர்
இருசொற் பெயரீடு
பிரிசசு யுனிகலர்
(லெசுகி, 1778)

பிரிசசு யுனிகலர் (Brissus unicolor) என்பது பிரிசிடே குடும்பத்தில் பிரிசசு மூரைகளின் பேரினத்தில் உள்ள ஒரு சிற்றினமாகும். இந்த உயிரினத்தின் ஓடு முட்களால் மூடப்பட்டிருக்கும். பிரிசசு யுனிகோலர் முதன்முதலில் 1778ஆம் ஆண்டில் நாதனேல் கோட்பிரைட் லெசுகே என்பவரால் விவரிக்கப்பட்டது.[1]

வாழிடம்

தொகு

இம் மூரை 6 முதல் 250 மீட்டர் ஆழத்தில் கடலில் கரடுமுரடான மணலில் புதைந்து வாழும். இதனால் இதனை நாம் அரிதாகவே உயிருடன் காணலாம். மத்தியதரைக் கடலில் இவை சில நேரங்களில் போசிடோனியா ஓசியானிகாவின் நாடா விதைக்கு அருகிலுள்ள வண்டலில் புதைந்து கிடப்பதைக் காணலாம்.

விளக்கம்

தொகு

உயிருடன் இருக்கும்போது, இம் மூரையின் முழு உடலும் பழுப்பு நிற முட்களால் மூடப்பட்டிருக்கும். மூரை இறந்த பிறகு, இதன் ஓடு ("பை" என்றும் அழைக்கப்படுகிறது) சாம்பல் புள்ளிகளைக் கொண்ட ஒரு தனித்துவமான வடிவத்தைப் பெறும். இந்தப் புள்ளிகள் தற்காலிகமாக மூரையின் உரையில் காணப்படும். சிறிது காலத்திற்குப் பிறகு மறைந்துவிடும். இதனால் இந்த விலங்கு வெள்ளை அல்லது வெளிர் பழுப்பு நிறத்திலிருக்கும்.

 
மூரை உரை

மூரை முதிர்ச்சியடையும் போது உரை தடிமனாகிறது. உரை சுமார் 14 செமீ நீளத்தை அடையலாம்.

பரவல்

தொகு

பிரிசசு யுனிகலர் சிற்றினம் மத்தியதரைக் கடல் மற்றும் அத்லாந்திக் பெருங்கடலின் சில பகுதிகளில் வாழ்கின்றன. [2]

மேற்கோள்கள்

தொகு
  1. Kroh, A. (2010). Brissus unicolor (Leske, 1778). In: Kroh, A. & Mooi, R. (2010) World Echinoidea Database. at the World Register of Marine Species.
  2. sealifebase.ca
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரிசசு_யுனிகலர்&oldid=4041253" இலிருந்து மீள்விக்கப்பட்டது