பிரிசசு லேட்டிகாரினேடசு

பிரிசசு லேட்டிகாரினேடசு
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
இசுபேடன்கொய்டா
குடும்பம்:
பேரினம்:
இனம்:
பி. லேட்டிகாரினேடசு
இருசொற் பெயரீடு
பிரிசசு லேட்டிகாரினேடசு
(லெசுகி, 1778)

பிரிசசு லேட்டிகாரினேடசு (Brissus latecarinatus) என்பது பிரிசிடே குடும்பத்தைச் சேர்ந்த கடல் முள்ளெலி ஒரு சிற்றினமாகும். இதன் ஓடு முட்களால் மூடப்பட்டுள்ளது. 1778ஆம் ஆண்டில் நாதனேல் கோட்பிரைட் லெசுகே என்பவரால் பிரிசசு லேட்டிகாரினேடசு முதன்முதலில் விவரிக்கப்பட்டது.[1]

பரவல்

தொகு

பிரிசசு லேட்டிகாரினேடசு இந்தோ-பசிபிக் முழுவதும் இந்தியப் பெருங்கடல், மேற்கு பசிபிக் மற்றும் இரு நீர்நிலைகளையும் இணைக்கும் அனைத்துப் பெருங்கடல்களின் வெப்பமண்டல நீரில் பரவியுள்ளது. இது 45 அடி (14 மீ) ஆழத்தில் உள்ள பாறைகளில் காணப்படுகிறது.[2]

விளக்கம்

தொகு

பிரிசசு லேட்டிகாரினேடசு பழுப்பு, இளஞ்சிவப்பு மற்றும் பச்சை நிறத்தில் இருக்கும் குறுகிய முட்களால் மூடப்பட்டுள்ளது.[3] இது ஒரு பிறை வடிவ வாய் மற்றும் கீழே ஒரு பெரிய குதத் திறப்பைக் கொண்டுள்ளது.[3] இதன் மேற்பரப்பு ஐந்து பகுதிகளைக் கொண்ட இதழியல் வடிவத்தில் காணப்படும்.[3] இது அதிகபட்சமாக 7 அங்குல நீளம் வரை வளரக்கூடியது.[3]

வாழ்க்கைச் சுழற்சி

தொகு

எச்சினாய்டியா வகுப்பின் பிற சிற்றினங்களைப் போலவே, இந்தச் சிற்றினமும் பாலின வேறுபாடுடைய உயிரிகள் ஆகும்.[2] இது வெளிப்புற கருத்தரித்தல் முறையில் கருவுறுதல் அடைகிறது.[2] முட்டைகள் வாய்சூழ் பகுதி மீதோ, ஆசன வாய்க்கு அருகில் உள்ள பெரிபுரோட் அல்லது இதழ்களில் உள்ள குழிவான பகுதியில் தக்கவைக்கப்படுகின்றன.[2] கரு வளர்ச்சியடைந்து மிதவைவாழியாகக் காணப்படும். இவை கீழே பாறையின் மீது தமது குழாய் கால்களைப் பயன்படுத்தி ஒட்டிக்கொள்கின்றன. பின்னர் இவை இறுதியில் இளம் கடல் முள்ளெலி மாறுகின்றன.[2] இந்த வளர் செயல்முறை பல மாதங்கள் எடுக்கும்.[2]

நடத்தை

தொகு

இந்தச் சிற்றினம் கடல் புல் மற்றும் மணல் அடிப்பகுதிகளைக் கொண்ட இடங்களில் வாழ்கின்றன.[4] இது தொடர்ந்து மணலில் புதைந்து காணப்படுகிறது.[5] buries itself in the sand, processing it to get rid of debris and other clinging materials.[4] இது ஓர் உயிரியல் இடையூறு ஆகும். இது மண் மற்றும் வண்டல்களை மறுசீரமைப்பதில் ஈடுபட்டுள்ளது.[6]

மேற்கோள்கள்

தொகு
  1. WoRMS. "Brissus latecarinatus (Leske, 1778)". World Register of Marine Species..
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 "Brissus latecarinatus, Keeled heart urchin". www.sealifebase.ca. பார்க்கப்பட்ட நாள் 2024-03-04.
  3. 3.0 3.1 3.2 3.3 Hoover, John P. (1998). Hawai'i's sea creatures: a guide to Hawai'i's marine invertebrates. Honolulu, Hawaii: Mutual Pub. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-56647-220-3.
  4. 4.0 4.1 "Section: Urchins: Group: Heart Urchins: Species: Brissus latecarinatus (Keeled Heart Urchin)". www.saltcorner.com. பார்க்கப்பட்ட நாள் 2024-03-04.
  5. "Heart Urchin, Brissus latecarinatus". www.marinelifephotography.com. பார்க்கப்பட்ட நாள் 2024-04-13.
  6. "Brissus latecarinatus (Leske 1778) - Encyclopedia of Life". eol.org. பார்க்கப்பட்ட நாள் 2024-04-13.