பிரித்தானிக்கா மலையாளக் கலைக்களஞ்சியம்
பிரித்தானிகா மலையாளக் கலைக்களஞ்சியம்[1] (Britannica Malayalam Encyclopedia) என்பது மலையாள மொழியில் உருவாக்கப்பட்ட ஒரு கலைக்களஞ்சியப் படைப்பாகும். மலையாளப் பிரித்தானிகா என்றும் மலையாளக் கலைக்களஞ்சியம் என்றும் இது அழைக்கப்படுகிறது. இதன் உள்ளடக்கத்தின் பெரும்பகுதி பிரித்தானிகா கலைக்களஞ்சியத்தின் மொழி பெயர்ப்பாகும்.[2][3]
2004-ஆம் ஆண்டில் இந்தியப் பதிப்பாளர்கள் கூட்டமைப்பிலிருந்து இக்கலைக்களஞ்சியம் ஒரு விருதை வென்றது என்றாலும்,[3] ஒரு நுகர்வோர் நீதிமன்றம் புத்தகத்தின் விற்பனையைத் தடை செய்தது. ஏனெனில் இது பல தவறான தகவல் பிழைகளுடன் வெளிவந்தது கண்டறியப்பட்டது. இப்புத்தக வெளியீட்டாளர்களின் தரப்பில் நியாயமற்ற வர்த்தக நடைமுறை பின்பற்றப்பட்டு இருப்பதாகவும் நீதிமன்றம் கண்டறிந்தது. கேரளாவின் தோமினிக் சாக்கோ புத்தக நிறுவனம் மற்றும் இந்திய பிரித்தானிகா கலைக்களஞ்சிய நிறுவனம் ஆகியவை இப்புத்தக வெளியீட்டு நிறுவனங்களாகும்.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Britannica Malayalam Encyclopedia 3 Vol". Sapnaonline.com.
- ↑ "Britannica in Malayalam". தி இந்து. September 20, 2002.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ 3.0 3.1 "Encyclopaedia Britannica wins awards". பிசினஸ் லைன். February 18, 2004.
- ↑ George, Sanu (August 8, 2004). "Errors in Encyclopaedia Britannica in Malayalam". யாகூ! செய்திகள். IANS. Archived from the original on 15 January 2006.
புற இணைப்புகள்
தொகு- Encyclopaedia Britannica: Malayalam listed at Sree Sankaracharya University of Sanskrit library