பிரித்தானியர் ஆட்சியில் இந்தியத் தொழிலாளர்களின் வருகை
கோல்புறூக் சீர்த்திருத்தங்களின் விளைவாக இலங்கையில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட பெருந்தோட்டங்களில் உள்நாட்டு மக்கள் வேலை செய்ய விரும்பவில்லை
காரணம்:
- தோட்ட முதலாளிமாரையும், இராணுவ வீரர்களையுப் போல் நினைத்தமை
- அவர்களின் கலாசாரம், பண்பாடுகள் ஏற்றுக் கொள்ள விரும்பாமை
- குறைந்த கூலி வழங்கப்பட்டமை
- தம் சூழலைவிட்டுப் பிரிந்து செல்ல விரும்பாமை
இந்தியத் தொழிலாளர்களின் வருகை
தொகு- பெருந்தோட்டத்துறைக்கு அதிக கூலியாட்கள் தேவைப்பட்டனர். எனவே இந்தியத் தொழிலாளர்கள் இங்கு தருவிக்கப்பட்டனர்
- பேர்கசன் அறிக்கைப்படி 1843 - 1872க்குமிடையில் சுமார் 48,000 - 72,000க்குமிடைப்பட்டோர் (இந்தியத் தொழிலாளர்) வந்தனர். எனினும், அவர்களுக்குள் 24,000 - 68,000க்குமிடைப்பட்டோர் வருடாந்தம் நாட்டைவிட்டு வெளியேறினர் என்றும் தெரியமுடிகின்றது
- தென்னிந்தியாவில் மதுரை, தூத்துக்குடி, திருநெல்லிவேலி, தஞ்சாவூர் போன்ற இடங்களிலிருந்தே இத்தொழிலாளர்கள் அதிகமாகத் தருவிக்கப்பட்டனர்.
- தேயிலைச் செய்கையின் ஆரம்பத்துடன் இவர்களுள் அநேகமானவர்கள் இலங்கையிலேயே நிலைத்துவிட்டனர்
- இன்றும் இத்தொழிலாளர்கள் இலங்கைப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழ்கின்றனர்
உசாத்துணை
தொகு- மெண்டிஸ், ஜீ. ஸி - நம்முன்னோரளித்த அருஞ்செல்வம், முதலாம் பாகம், கொழும்பு அப்போதிக்கரீஸ் கம்பனி, 1969
- புன்னியாமீன் பீ. எம்., - வரலாறு ஆண்டு 11 கண்டி சிந்தனை வட்டம், 1998