பிரித்தானிய மண்புழு சங்கம்

பிரித்தானிய மண்புழு சங்கம் (Earthworm Society of Britain) என்பது மண்புழுக்கள் மற்றும் அவற்றின் சுற்றுச்சூழலை நன்கு புரிந்துகொள்ளும் வகையில் அறிவியல் ஆராய்ச்சியை ஊக்குவித்து ஆதரவளிப்பதை நோக்கமாகக் கொண்ட அமைப்பாகும். இதன் பணியின் மூலம் மண்புழுக்கள் மற்றும் அவற்றின் வாழ்விடங்களைப் பாதுகாப்பதை ஊக்குவிப்பதோடு, எதிர்காலத்தில் இந்த உயிரினங்கள் தொடர்ந்து பயன்படுவதற்கு மக்களுக்குக் கல்வி மற்றும் ஊக்கமளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.[1][2] பிரித்தானிய மண்புழு சங்கம் 2009 இல் நிறுவப்பட்டது.[3]

பிரித்தானிய மண்புழு சங்கம் தேசிய மண்புழு பதிவுத் திட்டத்தை வழங்குகிறது. அமைப்பு சாரா இயற்கை ஆர்வலர்கள் மற்றும் மண்புழு ஆராய்ச்சி நிறுவன ஆராய்ச்சியாளர்கள் மூலம் மண்புழு குறித்த தகவல்களைச் சேகரித்து ஒருங்கிணைக்கும் பணியினை மேற்கொள்கிறது.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. "Earthworm Society of Britain launch event - a scientific test of worm charming | OPAL". Opalexplorenature.org. பார்க்கப்பட்ட நாள் 2016-10-17.
  2. Smith, Lewis (2009-11-02). "Earthworm invaders nudging out British species". Telegraph. பார்க்கப்பட்ட நாள் 2016-10-17.
  3. Lewis Smith (November 2, 2009). "Earthworm invaders nudging out British species". The Telegraph. பார்க்கப்பட்ட நாள் 6 March 2016.
  4. "Recording Earthworms". Earthwormsoc.org.uk. Archived from the original on 2016-07-02. பார்க்கப்பட்ட நாள் 2016-10-04.

வெளி இணைப்புகள்

தொகு