பிரித்திகா சௌத்ரி

இந்திய அமெரிக்க எழுத்தாளர் மற்றும் கலைஞர்

பிரித்திகா சௌத்ரி (Pritika Chowdhry) இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஓர் அமெரிக்க கலைஞர் மற்றும் எழுத்தாளர் ஆவார். சமூக-அரசியல் களத்தில் தனது சீரிய பணிக்காக இவர் அறியப்படுகிறார். [1] [2] பிரிவினை எதிர்ப்பு நினைவு திட்டம், எதிர்-நினைவக திட்டம் போன்ற இயக்கங்களை நிறுவினார். [3] [4]

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

இந்தியாவில் பிறந்த பிரித்திகா புது தில்லியில் பிறந்து வளர்ந்தார். [5] [6] 1999 ஆம் ஆண்டில் இவர் அமெரிக்கா சென்றார். [7]

2009 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளுக்கு இடையில், பிரித்திகா வருகை தரும் பேராசிரியராக இருந்தார். மக்கலெசுட்டர் கல்லூரியிலும் காட்சிக் கலைகள் கல்லூரியிலும் கல்வி கற்பித்தார். [8] [9]

2007 ஆம் ஆண்டில் பிரிவினை எதிர்ப்பு நினைவு திட்டத்தை நிறுவினார். [10] 1947 இந்தியப் பிரிவினை, 1971 வங்காளதேச சுதந்திரப் போர், 1919 ஜாலியன் வாலாபாக் படுகொலை உள்ளிட்ட வரலாற்று நிகழ்வுகளை மையமாகக் கொண்ட ஒன்பது துணைத் திட்டங்களை இந்தத் திட்டம் கொண்டிருந்தது. [11] குயின்சு அருங்காட்சியகம், வைசுமேன் கலை அருங்காட்சியகம் , அண்டர்டன் கலை அருங்காட்சியகம், மினசோட்டா அமெரிக்கக் கலை அருங்காட்சியகம் ,, சமசுகிருதி அருங்காட்சியகம் & கலை கண்காட்சியகம் மற்றும் இசுலிப் கலை அருங்காட்சியகம் போன்ற குறிப்பிடத்தக்க அருங்காட்சியகங்கள் மற்றும் கலைக்கூடங்களில் பிரித்திகாவின் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. [12] [13]

விருதுகள் மற்றும் அங்கீகாரம்

தொகு
  • 2007: டேவிட் மற்றும் எடித் சினைகோ பிராங்க் பட்டதாரி உறுப்பினர் தகுதி [14]
  • 2011: இந்திய ஆய்வுகளுக்கானஅமெரிக்க நிறுவனத்தின் [15] நிகழ்த்துக்கலை மற்றும் ஆக்கப்பூர்வ கலை உறுப்பினர் தகுதி

மேற்கோள்கள்

தொகு
  1. https://www.nbc26.com/news/national/artist-hopes-to-spark-conversations-about-traumatic-world-events
  2. https://www.financialexpress.com/lifestyle/a-pop-icon-how-andy-warhol-continues-to-remain-in-the-news/2493516/
  3. https://www.tandfonline.com/doi/abs/10.1080/2373566X.2015.1103196?journalCode=rgeo20
  4. https://artdaily.com/news/143815/Memory-Leaks-Interview-with-Pritika-Chowdhry-and-Francesca-Ramsay
  5. https://www.hindustantimes.com/lifestyle/art-culture/reimagining-nirbhaya-an-artist-s-ode-to-december-16-victim-101639635292805.html
  6. https://jang.com.pk/thenews/jan2012-weekly/nos-08-01-2012/enc.htm#2
  7. https://www.hometownsource.com/abc_newspapers/news/artsentertainment/karmic-dis-continuities-on-display-at-banfill/article_7c5c926a-cb73-5373-a270-b467d8699cd0.html
  8. https://indianexpress.com/article/lifestyle/art-and-culture/artist-pritika-chowdhry-homage-women-narratives-traumatic-jallianwala-bagh-india-partition-7829600/
  9. https://www.hometownsource.com/abc_newspapers/news/artsentertainment/karmic-dis-continuities-on-display-at-banfill/article_7c5c926a-cb73-5373-a270-b467d8699cd0.html
  10. https://indianexpress.com/article/lifestyle/art-and-culture/artist-pritika-chowdhry-homage-women-narratives-traumatic-jallianwala-bagh-india-partition-7829600/
  11. https://whitehotmagazine.com/articles/memorial-project-by-pritika-chowdhry/5354
  12. https://indianexpress.com/article/lifestyle/art-and-culture/artist-pritika-chowdhry-homage-women-narratives-traumatic-jallianwala-bagh-india-partition-7829600/
  13. http://www.sanskritifoundation.org/installations.htm
  14. https://web.archive.org/web/20200418022442/https://artsdivision.wisc.edu/programs/arts-awards/
  15. https://www.indiastudies.org/wp-content/uploads/2011/12/fellows2011-2012.pdf
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரித்திகா_சௌத்ரி&oldid=3449142" இலிருந்து மீள்விக்கப்பட்டது