பிரித்தோலைட்டு-(Ce)

நெசோசிலிக்கேட்டு கனிமம்

பிரித்தோலைட்டு-(Ce) (Britholite-(Ce)) என்பது (Ce,Ca)5(SiO4)3OH என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிமம் ஆகும். கதிரியக்கத்தன்மை கொண்ட இந்த அரிய கனிமம் வெவ்வேறு வண்ணங்களில் கிடைக்கிறது. கிரீன்லாந்தின் நௌச்காசிக்கு, இலிமாசாக்கு வளாகம், நர்சாக்கு, குச்சல்லெக்கு பகுதிகளில் பிரித்தோலைட்டு கண்டறியப்பட்டது.

பிரித்தோலைட்டு-(Ce)
Britholite-(Ce)
கனிமத்தின் புகைப்படம்
பொதுவானாவை
வகைகனிமம்
வேதி வாய்பாடு(Ce,Ca)5(SiO4)3OH
இனங்காணல்
படிக அமைப்புஅறுகோணம் - இரட்டைப் பட்டைக்கூம்பு
மோவின் அளவுகோல் வலிமை5.5
மிளிர்வுவிடாப்பிடியான ஒளிர்வு - பிசின்
ஒப்படர்த்தி4.45
அடர்த்தி4.45
Major varieties
கடினத் தன்மை5.5 மோசின் திண்மை அளவுகோல்
கண்டுபிடிக்கப்பட்ட பகுதிநௌச்காசிக்கு, இலிமாசாக்கு வளாகம், நர்சாக்கு, குச்சல்லெக்கு, கிறீன்லாந்து

பிரித்தோலைட்டு-(Ce) கனிமத்தை முதன்முதலில் கிரீன்லாந்தின் இலிமாசாக்கு வளாகத்தில் உள்ள நௌச்காசிக்கு என்ற இடத்தில் 1897 ஆம் ஆண்டில் குசுதாப் ஃபிளிங்க் கண்டுபிடித்தார். இது கிரேக்க வார்த்தையான பிரித்தோசு என்பதன் பெயரால் பெயரிடப்பட்டது. இதன் பொருள் "எடை" என்பதாகும். இதன் குறிப்பிட்ட உயர் ஒப்படர்த்தியைக் குறிக்கிறது. பின்னர் இதன் பகுதிப்பொருள்களில் அதிக அளவு சீரியம் இருப்பதால் பிரித்தோலைட்டு-(Ce) என்று பெயரிடப்பட்டது.[1]

பன்னாட்டு கனிமவியலாளர் சங்கம் பிரித்தோலைட்டு-(Ce) கனிமத்தை Bri-Ce[2] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Britholite-(Ce): Mineral information". Mindat.org. பார்க்கப்பட்ட நாள் 7 August 2020.
  2. Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரித்தோலைட்டு-(Ce)&oldid=4128427" இலிருந்து மீள்விக்கப்பட்டது