பிரினொன்

கிரேக்க தளபதி மற்றும் தடகள வீரர்

ஏதென்சின் பிரைனான் (Phrynon of Athens (கிரேக்க மொழி: Φρύνων ο Αθηναίος; ஏதென்ஸ்; கி.மு 657 முன்னதாக – சீஜியன்; கி.மு. 606 ) என்பவர் பண்டைய ஏதென்சின் தளபதியும், பண்டைய ஒலிம்பிக் போட்டிகளின் வெற்றியாளரும் ஆவார். [1][2]

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

பிரைனான் கிமு 657 க்கு முன் ஏதென்சில் பிறந்தார். கிமு 636 இல், இவர் ஒலிம்பிக் போட்டிகளில் (36வது ஒலிம்பியாட் ) ஸ்டேடியன் அல்லது பென்டத்லானில் வென்றார். [1][3] பின்னர் இவர் ஏதென்சின் தளபதியாக ஆனார்.[4]

கி.மு 608-606 காலகட்டத்தில் ஏதென்சால் மிட்டிலினிக்கு எதிராக சிஜியம் மீது ஒரு போர் நடத்தப்பட்டது.[1] அப்போது பிரைனான் ஏதெனியர்களின் தளபதியாக இருந்தார். [2] மோதலை விரைவாக முடிவுக்குக் கொண்டுவருவதற்காக, மிட்டிலினியன் படையின் கட்டளையாளரான (ஜெனரல்) பிட்டகஸ் (கிரேக்கத்தின் ஏழு ஞானிகளில் ஒருவர்)[1][2] தாங்கள் இருவர் மட்டும் சண்டையில் ஈடுபடலாம் என்று விடுத்த அழைப்பை பிரைனான் ஏற்றுக்கொண்டார். பிட்டகஸ் தனது கேடயத்திற்கு அடியில் ஒரு வலையை மறைத்தை வைத்திருந்ததால், பிரைனான் சண்டையில் தோற்கடிக்கப்பட்டு, வலையினால் பிடிக்கபட்டுக் கொல்லபட்டார். [5] இவ்வாறு பிட்டகஸ் தனது தாயகத்திற்கான போரில் வெற்றி பெற்றார். இந்த மோதலைப் பற்றி மிட்டிலின் உயர்குடியும் கவிஞருமான அல்கேயஸ் பல கவிதைகளை எழுதினார்.[4]

ஏதெனியன் வீரர்கள் தங்கள் தளபதியின் சடலத்தைப் பெற்று, மிட்டிலினிலிருந்து வெளியேறி, ஏதென்சுக்கு கொண்டு சென்றனர், அங்கு பிரைனான் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டார். [2]

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 Karl Otfried Müller, ed. (1839). The history and antiquities of the Doric race (in English). Vol. 2. Translated by Lewis, George Cornewall; Tufnell, Henry. London: Murray (Robarts - University of Toronto). pp. 452-453 App. VI.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  2. 2.0 2.1 2.2 2.3 Great Greek Encyclopedia, Pavlos Drandakis, ed., கிரேக்க மொழி: «Φρύνων ο Αθηναίος» vol. 24, p. 231.
  3. Eusebius of Caesarea, Chronicle.
  4. 4.0 4.1 Develin, Robert (2003) [1989]. Athenian Officials 684-321 BC. New York: Cambridge University Press. p. 32. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-32880-2. பார்க்கப்பட்ட நாள் 4 May 2020.
  5. Philosophes de Diogène Laërce (in French). Chapter IV (Pittacus), p. 74.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரினொன்&oldid=3389884" இலிருந்து மீள்விக்கப்பட்டது