மிட்டிலீனியின் பிட்டகுசு

பண்டைய கிரேக்க ஞானி
(மிட்டிலீனியின் பிட்டகஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பிட்டகஸ் (Pittacus (/ˈpɪtəkəs/; கிரேக்கம்: Πιττακός; அண். கி.மு. 640 – 568 ) என்பவர் பண்டைய மைட்டிலினிய இராணுவ தளபதி மற்றும் கிரேக்கத்தின் ஏழு ஞானிகளில் ஒருவர் .

பிட்டகசின் மார்பளவு சிலை, பிந்தைய பாரம்பரிய காலத்தின் கிரேக்க மூலத்தின் ரோமானிய நகல், இலூவா

வாழ்க்கை தொகு

பிட்டகசின் பூர்வீகம் மிட்டிலீனி ஆகும். இவர் ஐரேடியசின் என்பவரின் மகனாவார். இவர் மிட்டிலினியன் படையில் கட்டளையாளராக (ஜெனரல்) இருந்தார். இவர் தனது இராணுவத்துடன் ஏதேனியர்கள் மற்றும் அவர்களின் தளபதி பிரைனானுக்கு எதிரான போரில் வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் விளைவாக, மிட்டிலினியர்கள் பிட்டகசை மிகப் பெரிய மரியாதையுடன் நடத்தினார்கள் மேலும் இவரது கைகளில் உச்ச அதிகாரத்தை வழங்கினர். பத்து வருட ஆட்சிக்குப் பிறகு, இவர் தனது பதவியிலிருந்து விலகினார். நகரமும் அரசியலமைப்பும் நல்ல முறையில் கொண்டு வரப்பட்டது.

ஏதெனியர்கள் மிட்டிலீனியிக்கு எதிராக சீஜியன் பகுதியைத் தாக்கவிருந்தபோது, பிட்டகஸ் அவர்களின் தளபதியை ஒண்டிக்கு ஒண்டியாக மோத சண்டைக்கு அழைத்தார். இவர்களின் சண்டையின் முடிவே போரின் முடிவாக தீர்மானிக்க முடிவானது. இதனால் அதிக இரத்தக்களரி தவிர்க்கப்படும் என்ற புரிதலுடன் இது ஏற்கபட்டது. சவால் நடந்த சண்டையில், தன் வாளால் ஏதேனியர்களின் தளபதியைக் கொன்றார். இதன் பின்னர் இவர் தனது நகர இராச்சியத்தின் ஆட்சியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நகரை பத்து ஆண்டுகள் ஆட்சி செய்தார், அந்த நேரத்தில் இவர் கவிதைகளில் சட்டங்களை உருவாக்கினார், அதில் ஒன்று: "ஒரு நபர் குடிபோதையில் செய்யும் குற்றத்திற்கு இரண்டு மடங்கு தண்டனை கிடைக்கும், குற்றவாளி நிதானமாக இருந்தால் அது தகுதியானது." "நீங்கள் எதைச் செய்தாலும் அதைச் சிறப்பாகச் செய்யுங்கள்" என்பது அவரது சிறந்த குறிக்கோள். [1]

பாலியானஸ் தனது வியூகங்களில் பிட்டகஸ் தனது கேடயத்தின் கீழ் ஒரு வலையை இரகசியமாக மறைத்து வைத்திருந்ததாக எழுதுகிறார். இவர் பிரைனானை வலையால் பிடித்து, கீழே இழுத்துச் சென்று கொன்றார். பாலியானசின் கூற்றுப்படி, பிட்டகசின் இந்த தந்திரம் கிளாடியேட்டர்களுக்கு இடையிலான சண்டைகளில் வலைகளைப் பயன்படுத்துவதற்கு வழிவகுத்தது. [2]

சில எழுத்தாளர்கள் இவருக்கு டைரேயஸ் என்ற மகன் இருந்ததாகக் குறிப்பிடுகின்றனர். இவரது மகன் கொல்லப்பட்டதாகவும், கொலைகாரனை பிட்டகஸ் முன் கொண்டுவந்தபோது, இவர் அந்த குற்றவாளியின் குற்றத்தை தள்ளுபடி செய்து, "பச்சாத்தாபத்தை விட மன்னிப்பதே சிறந்தது" என்றதாக தொன்மக்கதை கூறுகிறது. இந்த விஷயத்தைப் பற்றி, ஐராக்ளிட்டஸ் கிறிப்பிடுகையில், கொலைகாரனைத் தனது பிடியில் வைத்திருந்ததாகவும், பின்னர் அவரை விடுவித்து, "தண்டனையை விட மன்னிப்பதே மேல்" என்று கூறுகிறினார் என்றார்.

இவர் நாற்பத்தி இரண்டாவது ஒலிம்பியாட் வரை செல்வாக்கோடு வளர்ந்தார். எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்த இவர், ஐம்பத்தி இரண்டாவது ஒலிம்பியாட்டின் (கிமு 568) மூன்றாவது ஆண்டில் இறந்தார்.

எழுத்துகள் தொகு

பிட்டகஸ் சட்டங்களைப் பற்றிய உரைநடைப் படைப்பையும், 600 வரிகள் கொண்ட ஒரு நேர்த்தியான கவிதையையும் எழுதியதாக பண்டைய சுதா கலைக்களஞ்சியம் கூறுகிறது. இவரின் இந்த படைப்புகளின் எந்த பகுதியும் தற்போது எஞ்சியில்லை.. [3]

சட்ட சீர்திருத்தம் தொகு

குடிபோதையில் செய்யும் குற்றங்களுக்கு இரு மடங்கு தண்டனை வழங்க வேண்டும் என்று பிட்டகஸ் ஒரு சட்டத்தை இயற்றினார். [4] இது பெரும்பாலும் குடிபோதையில் வன்முறையில் ஈடுபடும் உயர்குடியினருக்கு எதிராக இயற்றப்பட்டது. இது, பொது மக்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. [5] [6]

மற்ற வாசகங்கள் தொகு

  • "பழிவாங்குவதை விட மன்னிப்பு சிறந்தது." [7]
  • "நீங்கள் எதைச் செய்தாலும் அதை நன்றாகச் செய்யுங்கள்."
  • "தேவர்கள் கூட தேவைக்கு எதிராக போராட முடியாது."
  • "சக்தி மனிதனை அடையாளம் காட்டுகிறது."
  • "நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்பதை முன்பே சொல்லாதீர்கள்; நீங்கள் தோல்வியுற்றால், நீங்களே சிரிப்பீர்கள்."
  • "ஒரு மனிதனை அவனுடைய துரதிர்ஷ்டங்களால் நிந்திக்காதே, ஊழ்வினை உன்னை முந்திவிடும் என்று பயப்படுகிறேன்."
  • "உங்கள் நண்பர்களைப் பற்றி மட்டுமல்ல, உங்கள் எதிரிகளைப் பற்றியும் தவறாகப் பேசுவதைத் தவிர்க்கவும்."
  • "உண்மை, நன் நம்பிக்கை, அனுபவம், புத்திசாலித்தனம், சமூகச்சிந்தனை, தொழில் ஆகியவற்றை வளர்த்துக் கொள்ளுங்கள்."
  • "உங்கள் வாய்ப்பை அறிந்து கொள்ளுங்கள்."

குறிப்புகள் தொகு

  1. As quoted by Diogenes Laërtius, i. 77.
  2. "Polyaenus, Stratagems, 1.25.1". Archived from the original on 2022-01-06. பார்க்கப்பட்ட நாள் 2022-01-06.
  3. Suda π 1659
  4. Aristotle, Politics 1274b 18–23
  5. McGlew, 1993: 95 n. 16.
  6. Jon Ploug Jørgensen, The taming of the aristoi - an ancient Greek civilizing process? History of the Human Sciences: July 2014 vol. 27 no. 3, pg 45
  7. As quoted in Hancock, Thomas (1826), The Principles of Peace, p. 211

 

ஆதாரங்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு