பிரிம்ஹாம் பாறைகள்
பிரிம்ஹாம் பாறைகள் (Brimham Rocks) ஒரு காலத்தில் பிரிம்ஹாம் செங்குத்துப் பாறைகள் (Brimham Crags) என்று அழைக்கப்பட்டன. இது 183.9 எக்டேர் (454 ஏக்கர்) பரப்பளவு கொண்ட சிறப்பு அறிவியல் ஆர்வத்தின் தளம் (எஸ்.எஸ்.எஸ்.ஐ) மற்றும் புவியியல் பாதுகாப்பு ஆய்வு (ஜி.சி.ஆர்) தளமாகும். இது வடக்கு யார்க்சயரின் ரிப்பனுக்கு தெற்கே 8 மைல் (13 கி.மீ) தொலைவில் அமைந்துள்ளது. இந்தத் தளம் 1958 ஆம் ஆண்டில் சிறப்பு அறிவியல் ஆர்வத்தின் தளமாக அறிவிக்கப்பட்டது. இது பூர்ச்ச (பிர்ச்) வனப்பகுதியின் சிறிய பகுதிகளுடன் இருக்கு பருமணற்கல்லின் வெளிப்புறமாகு.ம் இது ஈரமான மற்றும் உலர்ந்த புதர்ச்செடிகள் கொண்ட நிரம்பிய பெரிய கரம்பு நிலமாகும்[1][2][3]
சிறப்பு அறிவியல் ஆர்வத்தின் தளம் | |
சிறப்பு அறிவியல் ஆர்வத்தின் உயிரியல் தளத்திலுள்ள சிலைக் கற்கள் | |
தேடல் பகுதி | வடக்கு யார்க்சயர் |
---|---|
கட்டக் குறிப்பு | SE211647 |
ஆள்கூறுகள் | 54°04′51″N 01°41′08″W / 54.08083°N 1.68556°W |
ஆர்வம் | உயிரியல், நிலவியல் |
பரப்பளவு | 183.8959 எக்டேர்கள் (1.839 km2; 0.7100 sq mi) |
அறிவிப்பு | 19 பெப்ரவரி 1988 |
அமைவிட நிலவரை | Defra Magicmap |
இந்தத் தளம் அதன் நீரால் அரிக்கப்பட்ட பாறைகளுக்கும் வானிலையால் அரிக்கப்பட்ட பாறைகளுக்கும் பெயர் பெற்றது. அவை 325 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவானதிலிருந்து அற்புதமான வடிவங்களை எடுத்துள்ளன. 18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளில், ஹேமான் ரூக் போன்ற பழம்பொருள் ஆர்வலர்கள் டுரூயிடுகளால் ஓரளவிற்குச் செதுக்கப்பட்டிருக்க முடியுமா என்று ஆச்சரியப்பட்டனர். இது 1860 ஆம் ஆண்டின் ஜேம்ஸ் மேக்பெர்சனின் பண்டைய கவிதைகளின் துண்டுகள் மற்றும் புதிய-டுரூயிடிசத்தில் வளரும் ஆர்வத்துடன் பிரபலமாக இருந்த ஒரு யோசனையாகும். இருநூறு ஆண்டுகளாக, சில கற்கள் டுரூயிட் சிலைகள், டுரூயிட் பலிபீடம் மற்றும் டுரூயிட் எழுதும் மேசை போன்ற கற்பனை பெயர்களைக் கொண்டுள்ளன.
பிரிம்ஹாம் பாறைகள் அதன் புவியியல் மற்றும் மேட்டுநில வனப்பகுதி மற்றும் அமில ஈரமான மற்றும் வறண்ட வெப்ப வாழ்விடங்களின் மதிப்பு காரணமாக சிறப்பு அறிவியல் ஆர்வத் தள நிலைமையைக் கொண்டுள்ளது. அவை சிக்வீட் வின்டர்கிரீன், கவ்பெர்ரி, போக் அஸ்போடெல் மற்றும் மூன்று வகையான குட்டைப்புதர்ச்செடிகள் (ஹீத்தர்) போன்ற உள்ளூர் மற்றும் சிறப்புத் தாவர வடிவங்களை ஆதரிக்கின்றன.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Designated sites view, Brimham Rocks SSSI, details". designatedsites.naturalengland.org.uk. Natural England. 19 February 1988. பார்க்கப்பட்ட நாள் 27 January 2020.
- ↑ "Photography Competition winners revealed". Nidderdaleaonb.org.uk. Nidderdale AONB. 18 October 2018. Archived from the original on 15 February 2020. பார்க்கப்பட்ட நாள் 15 February 2020.
- ↑ "Magic Map Brimham Rocks SSSI". magic.defra.gov.uk. Defra. பார்க்கப்பட்ட நாள் 27 January 2020.
வெளி இணைப்புகள்
தொகு- National Trust, Brimham Rocks website
- Brimhamrocks.co.uk (archived)
- Brimham Rocks Nidderdale, Dave-ford.co.uk (archived)
- Pennant, Thomas (1804). A tour from Alston-Moor to Harrowgate, and Brimham Crags. Strand, London: C. Mercier & Co. பார்க்கப்பட்ட நாள் 23 February 2020.
noonstone brimham moor.
(Contains a section on Brimham Rocks, and a comment about the Noonstone at the end).