பிரியாகந்தைடீ

பிரியாகந்தைடீ
பிரியாகாந்தசு அரெனாட்டசு (Priacanthus arenatus)
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
துணைவரிசை:
குடும்பம்:
பிரியாகந்தைடீ
பேரினங்கள்

கட்டுரையில் பார்க்கவும்.

பிரியாகந்தைடீ (Priacanthidae), பேர்சிஃபார்மசு ஒழுங்கைச் சேர்ந்த ஒரு மீன் குடும்பம் ஆகும். இக் குடும்பத்தில் 18 இனங்கள் அடங்கியுள்ளன. இக் குடும்பத்தைச் சேர்ந்த மீனினங்கள் கடினமான முட்களைக் கொண்ட செதில்களைக் கொண்டுள்ளன. இதனால், இக் குடும்பத்துக்கு பிரியோ (கடிக்கும்), அக்காந்தா (முள்) என்னும் சொற்களின் சேர்க்கையால் உருவான பிரியாகந்தைடீ என்னும் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. இக் குடும்பத்திலுள்ள இனத்து மீன்கள் பொதுவாகப் பெரிய கண்களைக் கொண்டவை. இதனால் இவற்றை ஆங்கிலத்தில் பெருங்கண் (bigeye) என அழைப்பர். ஊனுண்ணும், இரவில் இரைதேடும் இவற்றின் வாழ்க்கை முறைக்கு இப் பெரிய கண்கள் உதவியாக உள்ளன. பிரியாகந்தைடீக்கள் பெரும்பாலும் ஒளி பொருந்திய சிவப்பு நிறமானவை. எனினும், வேறு நிறங்களைக் கொண்ட மீனினங்களும் இக் குடும்பத்தில் உள்ளன. பெரும்பாலான இக் குடும்ப மீன்கள் அதிக அளவாக 30 சதம மீட்டர் (12 அங்குலம்) வரை வளர்கின்றன. சில இனங்கள் 50 சதம மீட்டர்கள் (20 அங்குலம்) வரை வளரக்கூடியன.

பிரியாகந்தைடீ குடும்ப மீன்கள் அத்திலாந்திக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல், பசிபிக் பெருங்கடல் ஆகியவற்றின் வெப்பவலய, துணைவெப்பவலயப் பகுதிகளில் வாழ்கின்றன. பொதுவாக இவைகளைப் பவளப்பாறைகள் அல்லது கடலடியில் துருத்திக் கொண்டிருக்கும் பாறைகளுக்கு அண்மையில் காணலாம். இவற்றில் சில இனங்கள் உணவுக்காகப் பிடிக்கப்படுகின்றன.

வகைப்பாடு

தொகு
 
பிரியாகாந்தசு ஆம்ரூர், மாலைதீவுகள்
 
பிரிசித்தியெனிசு ஆல்ட்டா

பிரியாகந்தைடீ குடும்பம் 4 பேரினங்களாகப் பிரிக்கப்படுகின்றன.

  1. பிரியாகாந்தசு (Priacanthus)
  2. பிரிசித்தியெனிசு (Pristigenys)
  3. எட்டரோபிரியாகாந்தசு (Heteropriacanthus)
  4. கூக்கியோலசு (Cookeolus)

இவற்றையும் பார்க்கவும்

தொகு

உசாத்துணை

தொகு

வெளியிணைப்புக்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரியாகந்தைடீ&oldid=1676142" இலிருந்து மீள்விக்கப்பட்டது