பிரியா கிருஷ்ணசாமி
ப்ரியா கிருஷ்ணசாமி இந்தியாவின் தமிழ்நாட்டை பூர்விகமாகக் கொண்ட, மும்பையில் வசித்து வரும் இந்திய திரைப்பட தொகுப்பாளராவார்.புனேவில் உள்ள இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தில் (FTII) முன்னாள் மாணவரான இவர், பல்வேறு திரைப்படங்களில் திரைப்பட தொகுப்பாளராக நிபுணத்துவத்துடன் பணியாற்றி வருகிறார்.
திரைப்படத்திற்கான தேசிய விருதினை இரண்டு முறை பெற்றுள்ள இவர், தொகுப்பாளராக மட்டுமின்றி இந்திய திரைப்படத்துறையில், தயாரிப்பாளராகவும், எழுத்தாளராகவும், இயக்குநராகவும் இந்தி மற்றும் தமிழ்த் திரைப்படத்துறையில் பணியாற்றிவருகிறார்.
2004 ஆம் ஆண்டில், ஆங்கிலத்தில் வெளியான, கேரளாவின் களரி கலையைப் பற்றிய ஆவணப்படமான, 'தி ஐ ஆஃப் தி ஃபிஷ் - தி கலரிஸ் ஆஃப் கேரளா' சிறந்த கலை / கலாச்சாரத் திரைப்படத்திற்கான தேசிய விருதை வென்றுள்ளது.[1]
2009 ம் ஆண்டில் வெளியான NFDCயின் புகழ்பெற்ற திரைக்கதை எழுத்தாளர்களின் ஆய்வகத்தின் தயாரிப்பான கங்கூபாய் (2013) இந்தித் திரைப்படத்தின் மூலம் இவர் திரைப்பட இயக்குநராக அறிமுகமாயுள்ளார்.[2]
2019 ஆம் ஆண்டில் வெளியான சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான தேசிய விருதை வென்ற பாரம் (2020) என்ற தமிழ் மொழி விறுவிறுப்பான திரைப்படத்தை இவரே திரைக்கதை எழுதி, தயாரித்து, இயக்கி தொகுத்து, வெளியிட்டுள்ளார்.[3]
திரைப்படவியல்
தொகுஆண்டு | திரைப்படம் | என வரவு வைக்கப்பட்டது | மொழி | குறிப்புகள் | |
---|---|---|---|---|---|
இயக்குநர் | ஆசிரியர் | ||||
1988 | ஓம்-தார்-பி-தார் | ஹிந்தி | |||
1989 | பெர்சி | குஜராத்தி | நடிகையும் கூட | ||
1990 | காஃபிலா | ஹிந்தி | |||
1998 | பாம்பே பாய்ஸ் | ஹிந்தி | |||
1999 | போபால் எக்ஸ்பிரஸ் | ஹிந்தி | |||
2013 | கங்கூபாய் | ஹிந்தி | எழுத்தாளரும் கூட | ||
2020 | பாரம் | தமிழ் | மேலும் தயாரிப்பாளர் மற்றும் எழுத்தாளர் |