பிரியா மோகன்

இந்தியத் தடகள வீராங்கனை

பிரியா அப்பத்தன்னகள்ளி மோகன் (Priya Habbathannahalli Mohan) இந்தியாவைச் சேர்ந்த ஒரு தடகள வீரராவார். 2003 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 15 ஆம் தேதியன்று இவர் பிறந்தார்.[1] 2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற 400 மீட்டர் மூத்தோர் தேசிய வெற்றியாளர் போட்டியில் பந்தயத் தொலைவை 53.29 வினாடிகளில் கடந்து வென்றார். கென்யாவின் நைரோபியில் 2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற 20 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகத் தடகள வெற்றியாளர் போட்டியில் கலப்பு 4×400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கம் வென்றார். ஆசிய விளையாட்டுப் போட்டிகள் எட்டாத நிலையில், பிரியா மோகன் பாரிசு ஒலிம்பிக்கு போட்டியை அடுத்த இலக்காக நிர்ணயித்து முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்.

பிரியா மோகன்
Priya Mohan
தனிநபர் தகவல்
தேசியம்இந்தியர்
பிறப்பு15 மார்ச்சு 2003 (2003-03-15) (அகவை 21)
கருநாடகம்
விளையாட்டு
நாடுஇந்தியா
விளையாட்டுதடகள விளையாட்டு
நிகழ்வு(கள்)விரைவோட்டம்
பதக்கத் தகவல்கள்
நாடு  இந்தியா
ஆசிய இளைஞர் தடகள வெற்றியாளர் போட்டி
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2019 ஆங்காங்கு கலப்புத் தொடரோட்டம்
உலக இளைஞர் தடகள வெற்றியாளர் போட்டி
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2021 நைரோபி கலப்பு 4 × 400 மீட்டர் தொடரோட்டம்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2022 கலி கலப்பு 4 × 400 மீட்டர் தொடரோட்டம்
3 ஆகத்து 2022 இற்றைப்படுத்தியது.

பன்னாட்டு போட்டிகள் தொகு

ஆண்டு போட்டி இடம் நிலை நிகழ்வு குறிப்புகள்
  இந்தியா
2019 2019 ஆசிய இளைஞர் தடகள வெற்றியாளர் போட்டி ஆங்காங் 2 ஆம் இடம் கலப்பு தொடரோட்டம்
2021 2021 உலகத் தடகளம் 20 வயதுக்கு உட்பட்டோர் வெற்றியாளர் போட்டி நைரோபி, கென்யா 4 ஆவது 400 மீ 52.77
2021 2021 உலகத் தடகளம் 20 வயதுக்கு உட்பட்டோர் வெற்றியாளர் போட்டி நைரோபி, கென்யா 3 ஆவது கலப்பு 4 × 400 மீட்டர் தொடரோட்டம் 3:20.60

மேற்கோள்கள் தொகு

  1. "Karnataka athlete Priya H Mohan keen to improve after breaking records in Kozhikode".
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரியா_மோகன்&oldid=3860304" இலிருந்து மீள்விக்கப்பட்டது