பிரிவு (அகத்திணை)

அகப்பொருள் இலக்கணத்தில் தலைவன் தலைவியைப் பிரிந்து செல்லும் பல்வேறு சூழல்கள் கூறப்பட்டுள்ளன. பிரிவின் வகை, பிரிவிற்கான காரணங்கள், நபர்கள் பற்றி தொல்காப்பியம் கூறுகிறது.

பிரிவின் வகை

தொகு

பிரிவு காலிற்பிரிவு, கலத்திற்பிரிவு என இருவகைப்படும். காலிற்பிரிவு தரை வழியாகவும் கலத்திற் பிரிவு கடல்வழியாகவும் நடைபெறும்.

இரு வகைப் பிரிவும் நிலை பெறத் தோன்றலும்
உரியது ஆகும் என்மனார் புலவர்[1]

பிரிவின் காரணங்கள்

தொகு

கல்வி, போர், தூது ஆகிய காரணங்களுக்காகப் பிரிவு ஏற்படும்.

ஓதல், பகையே, தூது, இவை பிரிவே[2]

பிரிவிற்குரியோர்

தொகு

அரசர், போர்வீரர்கள், தூது செல்வோர், பொருளீட்டச் செல்வோர் ஆகியோர் பிரிவிற்குரியோர். அவர்களுள் அரசர் போரின் பொருட்டுப் பிரிந்து செல்வர். அரசரைச் சார்ந்த அமைச்சர், போர் வீரர் முதலியோர் அரசரின் ஏவலை நிறைவேற்றும் பொருட்டு அரசரோடு செல்வர். அந்தணர் கல்வியின் பொருட்டு பிரிந்து செல்வர். வணிகர் பொருளீட்டும் பொருட்டுப் பிரிந்து செல்வர்.

பெண்கள்

தொகு

பெண்கள் கடல் கடந்து செல்வதில்லை. முந்நீர் வழக்கம் மகடூஉவொடு இல்லை என்கிறது தொல்காப்பிய நூற்பா.

மேற்கோள்கள்

தொகு
  1. தொல்:அகத்திணை -நூற்பா 13
  2. தொல்:அகத்திணை -நூற்பா 27
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரிவு_(அகத்திணை)&oldid=3734326" இலிருந்து மீள்விக்கப்பட்டது