பிருகத் ஜாதகம்

பிருகத் ஜாதகம் இந்திய வானியல் அறிஞரான வராஹ மிகிரர் என்பவரால் இயற்றப்பட்டது. இந்து சோதிடக்கலை மரபின் முதல்நிலை மூலங்களில் தனித்துவம் மிக்க நூலாகப் போற்றப்படுகின்றது.

பிருகத் ஜாதகம்
நூலாசிரியர்வராகமிகிரர்
நாடுஇந்தியா
மொழிசமஸ்கிருதம்
பொருண்மைசோதிடம்

நூல் அமைப்பு

தொகு

28 அத்தியாயங்களை கொண்டது.

  • முதல் இரண்டு அத்தியாயங்கள் சோதிடக்கலையுடன் தொடர்புடைய கலைச்சொற்களையும், அவற்றிற்கான விளக்கங்கைளயும் கொண்டுள்ளது.
  • 3வது அத்தியாயம் - விலங்கு, தாவரங்களுடன் தொடர்புபட்ட சோதிட அம்சங்களை கூறுகின்றது.
  • 4வது அத்தியாயத்தில் தாய் ஒருத்தி கருவுற்ற நேரத்தின் கிரக நிலைகளை கணிப்பிடுதல் பற்றிக் கூறுகின்றது.
  • 5வது அத்தியாயம் குழந்தையினை பிரசவிக்கும் நேரத்திற்கான கிரகநிலைகளை குறிப்பிடுகின்றது.
  • 6வது அத்தியாயம் பாலரிஷ்டம், சிசுமரணம், இளம்பராயத்தில் ஏற்படும் அகால மரணம் என்பவற்றுடன் தொடர்புபட்ட சோதிட விடயங்களைக் கூறுகின்றது.
  • 7ஆம் அத்தியாயம் ஒருவரின் ஆயுளின் அளவைக் கணிப்பீடு செய்யும் முறையைக் கூறுகின்றது.
  • 8ஆம் அத்தியாயம் சோதிடக்கலையில் குறிப்பிடப்படும் தசா, அர்த்ததசா பற்றிக் கூறுகின்றது.
  • 9ஆம் அத்தியாயம் அஷ்டவர்க்கம் பற்றிக் கூறுகின்றது.
  • 10ஆம் அத்தியாயம் ஒருவனுடைய ஜாதகம் அவனுடைய தொழில் நிலைமைகள் குறித்து தீர்மானிக்கும் முறையைக் கூறுகின்றது.
  • 11-15ஆம் அத்தியாயங்கள் இராஜயோகம், ஏழ்மையோகம், சந்திரயோகம், இரட்டைக்கிரக யோகம், மூன்று கிரக யோகம், சந்நியாச யோகம் என்பன பற்றிக் கூறுகின்றன.
  • 16,17ஆம் அத்தியாயங்கள் நட்சத்திரங்கள், சந்திரஸ்தானங்கள் என்பன பற்றிக் கூறுகின்றன.
  • 18ஆம் அத்தியாயம் இராசிகளில் சூரியன், செவ்வாய் முதலான கோள்கள் செலுத்தும் செல்வாக்கு பற்றிக் கூறுகின்றது.
  • 19-21ஆம் அத்தியாயங்கள் கிரகங்களின் இயல்புகள், கிரகபாவங்கள், அவற்றின் வர்க்கங்கள் பற்றிக் கூறுகின்றன.
  • 22ஆம் அத்தியாயம் யோகங்கள் பற்றிக் கூறுகின்றது.
  • 23ஆம் அத்தியாயம் ஆணுக்குரிய யோகங்கள் பற்றிக் கூறுகின்றது.
  • 24ஆம் அத்தியாயம் பெண்ணுக்குரிய யோகங்கள் பற்றிக் கூறுகின்றது.
  • 25ஆம் அத்தியாயம் கிரக நிலைகளால் மரணம் தீர்மானிக்கப்படுதல் பற்றிக் கூறுகின்றது.
  • 26ஆம் அத்தியாயம் ஒருவரின் ஜாதகம் தொலைந்து ஃ அழிந்து போகுமிடத்து புதிய ஜாதகத்தைக் கணிப்பது பற்றிக் கூறுகின்றது.
  • 27ஆம் அத்தியாயம் திரேக்காணம் பற்றிக் கூறுகின்றது.
  • 28ஆம் அத்தியாயம் வராஹ மிகிரரின் மற்றொரு நூலான 'லகுயாத்ரா'வின் விடயத் தலைப்புக்களை சுருக்கமாக அறிமுகம் செய்கின்றது. பற்றிக் கூறுகின்றது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிருகத்_ஜாதகம்&oldid=2706237" இலிருந்து மீள்விக்கப்பட்டது