வராகமிகிரர்
வராகமிகிரர் (VARAHAMIHIRA, 505-587 CE) உச்சையினியில் வாழ்ந்த ஒரு இந்திய வானியலாளர், கணித மேதை மற்றும் சோதிடரும் ஆவார். இவர் வராகர் என்றும், மிகிர் என்றும் அழைக்கப்படுகிறார். இன்றைய மால்வாவிற்கு அருகிலுள்ள அவந்திப் பகுதியில் பிறந்தவர். இவரது தந்தை ஆதித்தியதாசரும் ஒரு வானியலாளர். மால்வாவின் பழம்பெரும் ஆட்சியாளர் யசோதர்மன் விக்கிரமாதித்தியனின் அவையில் நவரத்தினங்களில் ஒருவராக விளங்கினார்[1][2].
வராகமிகிரர் | |
---|---|
பிறப்பு | 505 CE |
இறப்பு | 587 CE |
தொழில் | இந்திய சோதிடர், கணிதவியலாளர் |
காலம் | குப்தப் பேரரசு |
கருப்பொருள் | வானியல், சோதிடம், கணிதம் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | பஞ்ச சித்தாந்திகம், பிருகத் சம்கிதம் (Brihat-Samhita), பிருகத சாதகம் (Brihat Jataka) |
குறிப்பிடத்தக்கப் படைப்புகள் தொகு
- பஞ்சசித்தாந்திகம்
- பிருகத்சம்கிதம்
- பிருகத் ஜாதகம்
பங்களிப்புகள் தொகு
முக்கோணவியல் தொகு
வராஹமிஹிராவின் கணித வேலையில் முக்கோணவியல் சூத்திரங்கள் கண்டுபிடிப்பும் ஒன்று.
வராகமிகிரர், ஆரியபட்டரின் சைன் அட்டவணையின் துல்லியத்தை அதிகரித்துள்ளார்.
எண்கணிதம் தொகு
எண்கணிததில் எதிர்ம எண்கள் மற்றும் பூச்சியத்தின் பண்புகளை வரையறுத்துள்ளார்.[3]
சேர்மானவியல் தொகு
தற்காலத்தில் பாஸ்கலின் முக்கோணம் என அறியப்படும் அமைப்பு பற்றி பண்டைக்காலத்தில் கண்டறிந்த கணிதவியலாளர்களுள் இவரும் ஒருவர். இதனை ஈருறுப்பு குணகங்களைக் கண்டறிய பயன்படுத்தினார்.[3][4][5]
ஒளியியல் தொகு
ஒளியியலில் துகள்களின் பின்பரவலால் ஒளிப் பிரதிபலிப்பும், ஊடகங்களுக்குள் ஊடுருவக்கூடிய திறனால் ஒளி விலகலும் நடைபெறுகிறது என்பது இவரது இயற்பியல் பங்களிப்புகளுள் ஒன்றாகும்.[4]
மேற்கோள்கள் தொகு
- ↑ History of Indian Literature. Motilal Banarsidass Publications. 2008. பக். 46.
- ↑ Ram Gopal (1984). Kālidāsa: His Art and Culture. Concept Publishing Company. பக். 15.
- ↑ 3.0 3.1 "History of Mathematics in India" இம் மூலத்தில் இருந்து 2015-10-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151001010745/http://archaeologyonline.net/artifacts/history-mathematics.html.
- ↑ 4.0 4.1 "Varahamihira" இம் மூலத்தில் இருந்து 2016-03-29 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160329073308/http://www.es.flinders.edu.au/~mattom/science+society/lectures/illustrations/lecture14/varahamihira.html.
- ↑ J J O'Connor; E F Robertson. "Varahamihira". http://www-history.mcs.st-andrews.ac.uk/Biographies/Varahamihira.html.
வெளியிணைப்புகள் தொகு
- O'Connor, John J.; Robertson, Edmund F., "வராகமிகிரர்", MacTutor History of Mathematics archive, புனித ஆண்ட்ரூசு பல்கலைக்கழகம்.
- Pancasiddhantika, Brihat Jataka, Brihat Samhita and Hora Shastra Various editions in English and Sanskrit. (PDF)
- The Brihat Jataka (1905) Pdf edition internet archive