ஈருறுப்புக் குணகம்

கணிதத்தில் ஈருறுப்புக் குணகங்கள் அல்லது ஈருறுப்புக் கெழுக்கள் (Binomial coefficients) எனப்படுபவை, ஈருறுப்புத் தேற்றத்தில் குணகங்களாக அமையும் நேர் நிறையெண்களாகும். இவை இரண்டு எதிரெண்ணாக இல்லாத நிறையெண்களால் எடுத்துரைக்கப்படலாம். n மற்றும் k ஆல் எடுத்துரைக்கப்படும் ஈருறுப்புக் குணகம் வழமையாக என எழுதப்படும். இது (1+x)n என்ற ஈருறுப்புக் கோவையின் விரிவில் xkயின் குணகமாகும். nஇன் இயல்தகு பெறுமானங்களுக்கும், kயின் 0இலிருந்து n வரையான பெறுமானங்களுக்கும் உரிய ஈருறுப்புக் குணகங்களை வரிசையாக ஒழுங்குபடுத்தும்போது பெறப்படும் முக்கோணம் பாஸ்கலின் முக்கோணம் எனப்படும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈருறுப்புக்_குணகம்&oldid=2228088" இருந்து மீள்விக்கப்பட்டது