இசுடர்லிங் சுழல் எண்
கணிதத்தில் ஸ்டர்லிங் எண் என்பது இரண்டு வகையாகப் புழங்குகிறது. அவைகளில் ஒரு n-கணத்தை k சுழல்களாகப் பிரிக்கக்கூடிய வழிகளின் எண்ணிக்கை முதல் வகை ஸ்டர்லிங் எண் அல்லது இசுடர்லிங் சுழல் எண் எனப் பெயர் பெறும்.அதாவது எத்தனை n-வரிசைமாற்றங்கள் k சுழல்களாலானவை என்ற எண்தான் இது. இதற்குக் குறியீடு s(n,k) என்றோ அல்லது என்றோ பயன்படுத்தப்படுகிறது. இதை n-cycle-k என்றோ n-சுழல்-k என்றோ உச்சரிக்கலாம்.
எடுத்துக்காட்டாக, = 6
ஏனென்றால், {a,b,c,d} போன்ற ஒரு 4-கணத்தின் மூன்றுசுழற்பிரிவுகள்:
- a/b/cd; a/c/bd; a/d/bc; b/c/ad; b/d/ac; c/d/ab
இவ்வெண்களின் முதல் சில மதிப்புகளின் அட்டவணையை ஸ்டர்லிங் எண்கள் என்ற கட்டுரையில் பார்க்கவும்.
மீள்வரு தொடர்பு
தொகுn > 0 என்றால்,
n பொருள்களை k சுழல்கள் உள்ள திரிபுகளாகச்செய்யும் செயலில், முதல் பட்சமாக என்ற ஒரு குறிப்பிட்ட பொருளை ஒற்றை உறுப்புச்சுழலாக வைத்திருக்கலாம். இப்பட்சம் வழிகளில் ஏற்படக்கூடியது.
இரண்டாவது பட்சமாக மற்ற ஏதாவதொரு சுழலில் ஓருறுப்பாக இருக்கவேண்டும். மற்ற சுழல்களின் எண்ணிக்கை . இவைகளில் ஓருறுப்பாக இருக்கக்கூடிய வழிகளின் எண்ணிக்கையைக் கணிப்பதற்கு முதலில் நாம் குறிப்பாக எடுத்துக் கொள்ளவேண்டியது, ஒரு r-சுழலில் ஒரு புது உறுப்பை r வழிகளில் சேர்க்கலாம் என்பதுதான். k சுழல்களில் எதுவும் இந்த ஐ ஏற்றுக்கொள்ளலாம்.இச்சுழல்களின் நீளங்கள் ஆக வெவ்வேறாக இருந்தாலும் என்பது நிச்சயம். அதனால் ஐ சுழல்களில் ஏதாவதொரு சுழலில் சேர்ப்பதற்கு (n-1) வழிகள் உள்ளன.
இவ்விரண்டு பட்சங்களின் உருவகம் தான் மீள்வரு தொடர்பு (Recurrence Relation)
ஏறுமுகக் காரணியத்துடன் உறவு
தொகு- n > 0 ஆக இருக்குமானால்,
- (*): .
இதனுடைய நிறுவல் உய்த்தறிதல் (Induction) முறையில் செய்யப்படுகிறது. முதலில் ஒரு குறியீடு.
இவை உய்த்தறிதல் முறையின் முதல் படிகள். k-ஆம் படியிலிருந்து k+1- ஆம் படிக்குச்செல்வதற்கு, நாம்
யை பயன்படுத்தவேண்டியிருக்கும்.
இறங்குமுகக் காரணியத்துடன் உறவு
தொகு(*) இல் x ஐ (-x) ஆக மாற்றினால், கிடைப்பது:
- n > 0 ஆக இருக்குமானால்,
- (*):