பிருந்தாவன் தோட்டம்

மைசூரின் பூங்கா
(பிருந்தாவன் பூங்கா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பிருந்தாவன் பூங்கா (பிருந்தாவனம் பூங்கா) (Brindavan Gardens) கர்நாடக மாநிலத்தில் கிருட்டிணராச சாகர் அணையை அடுத்துள்ளது. இது ஒரு படிநிலை பூங்காவாகும். பூங்காவிற்கான தளப்பணி 1927ம் ஆண்டு தொடங்கப்பட்டு 1932 ம் ஆண்டு நிறைவு பெற்றது.

பிருந்தாவன் பூங்கா / பிருந்தாவனம் பூங்கா
பிருந்தாவன் பூங்கா
Map
வகைபூங்கா
அமைவிடம்கிருட்டிணராச சாகர் அணை, ஸ்ரீரங்கப்பட்டணம், மண்டியா மாவட்டம், கர்நாடகா
ஆள்கூறு12°25′34″N 76°34′34″E / 12.42611°N 76.57611°E / 12.42611; 76.57611
பரப்பளவு60 ஏக்கர்கள் (24 ha)
உருவாக்கம்1932 (1932)
இயக்குபவர்Cauvery Niravari Nigama
வருகையாளர்கள்2 million

கிருட்டிணராச சாகர் அணையை அழகு படுத்தும் விதமாக இந்த பூங்கா உருவாக்கப்பட்டது. இது காசுமீரில் முகலாயர்கள் பாணியிலுள்ள சாலிமர் பூங்காவின் வடிவமைப்பை மாதிரியாக கொண்டு உருவாக்கப்பட்டது. இத்திட்டப்பணியை முன்னின்று செயல்படுத்தியவர் அப்போதய மைசூர் அரசின் திவான் சர் மிர்சா இசுமாயில் ஆவார்.

தொடக்கத்தில் இது கிருட்டிணராச சாகரா படிநிலை பூங்கா என அழைக்கப்பட்டது. தற்போது இது 60 ஏக்கருக்கும் மேல் 3 படிநிலைகளை கொண்டுள்ளது, குதிரை லாட வடிவில் முடிவடைகிறது.

பிருந்தாவன் பூங்கா 4 பாகமாக பிரிக்கப்பட்டுள்ளது. முதன்மை வாசல், தெற்கு பிருந்தாவன், வடக்கு பிருந்தாவன் மற்றும் குழந்தைகள் பூங்கா.

பிருந்தாவன் பூங்காவை ஒட்டி 75 ஏக்கரில் அரசு பழப்பண்ணையும் 30 ஏக்கரில் நகுவனம் என்ற தோட்டக்கலை பண்ணையும், 5 ஏக்கரில் சந்திரவனம் என்ற தோட்டக்கலை பண்ணையும் உள்ளது. இவை அனைத்தும் கர்நாடக அரசின் தோட்டக்கலைத் துறையின் கீழ் வருகிறது.

புகைப்படத் தொகுப்பு

தொகு

வெளி இணைப்பு

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிருந்தாவன்_தோட்டம்&oldid=4053211" இலிருந்து மீள்விக்கப்பட்டது