பிரெஞ்சு பெயர்ச்சொற்குறி

பிரெஞ்சு பெயர்ச்சொற்குறி எனப்படுவது, பிரெஞ்சு மொழியில் பயன்படுத்தப்படும் பெயர்ச்சொற்குறி ஆகும். பிரெஞ்சு மொழியில் மூன்று வகையான பெயர்ச்சொற்குறிகள் உள்ளன.

அவை,

௧. நிச்சய பெயர்ச்சொற்குறி

௨. நிச்சயமற்ற பெயர்ச்சொற்குறி

௩. பலனுள்-ஒன்று பெயர்ச்சொற்குறி


நிச்சய பெயர்ச்சொற்குறி (L'article défini)

  ஒருமை (Singulier) பன்மை (Pluriel)
மெய்யெழுத்திற்கு முன் உயிரெழுத்து (அல்லது) ஒளியற்ற h இற்கு முன்
ஆண்பால் (Masculin) le (ல) l' (ல்) les (லே)
பெண்பால் (Féminin) la (லா)


நிச்சயமற்ற பெயர்ச்சொற்குறி (L'article indéfini)

  ஒருமை (Singulier) பன்மை (Pluriel)
ஆண்பால் (Masculin) un (அங்) des (தே)
பெண்பால் (Féminin) une (யுன்)


பலனுள்-ஒன்று பெயர்ச்சொற்குறி (L'article partitif)

  ஒருமை (Singulier) பன்மை (Pluriel)
மெய்யெழுத்திற்கு முன் உயிரெழுத்து (அல்லது) ஒளியற்ற h இற்கு முன்
ஆண்பால் (Masculin) du (த்யூ) de l' (த ல்) des (தே)
பெண்பால் (Féminin) de la (த லா)


சுறுக்கப்பெற்ற பெயர்ச்சொற்குறிகள் (L'article contracte)

சில பெயர்ச்சொற்குறிகள் குறிப்பிட்ட சில முன்விபக்திகளுடன் இணைவதுண்டு. அப்பெயர்ச்சொற்குறிகளை சுறுக்கப்பெற்ற பெயர்ச்சொற்குறி என்பர். பிரெஞ்சு மொழியிலுள்ள "de" மற்றும் "á" என்னும் இரண்டு முன்விபக்திகள் இவ்வாறு பெயர்ச்சொற்குறிகளுடன் சேர்த்து சுருக்கப்பெருகின்றன.

  • de + le = du (த்யூ)
  • de + les = des (தே)
  • á + le = au (ஒ)
  • á + les = aux (ஒ)


குறிப்பு:

மேற்கண்ட பிரெஞ்சு பெயர்ச்சொற்குறி களின் உச்சரிப்பு தமிழில் அதன் அருகில் கொடுக்கப்பட்டுள்ளது.


மேலும் காண்க

தொகு