போர்த்துகீசிய பெயர்ச்சொற்குறி
போர்த்துகீசிய பெயர்ச்சொற்குறி எனப்படுவது, போர்த்துகீசிய மொழியில் பயன்படுத்தப்படும் பெயர்ச்சொற்குறி ஆகும். போர்த்துகீசிய மொழியிலும் இரண்டு வகையான பெயர்ச்சொற்குறிகளே உள்ளன.
அவை,
பெயர்ச்சொற்குறிகள் | ஒருமை | பன்மை |
---|---|---|
ஆண்பால் | o | os |
பெண்பால் | a | as |
பெயர்ச்சொற்குறிகள் | ஒருமை | பன்மை |
---|---|---|
ஆண்பால் | um | uns |
பெண்பால் | uma | umas |
சுறுக்கப்பெற்ற பெயர்ச்சொற்குறிகள்
சில பெயர்ச்சொற்குறிகள் குறிப்பிட்ட சில முன்விபக்திகளுடன் இணைவதுண்டு. அப்பெயர்ச்சொற்குறிகளை சுறுக்கப்பெற்ற பெயர்ச்சொற்குறி என்பர். அவைகளுள் சிலவற்றை கீழ் கொடுக்கப்பட்டுள்ள பட்டியலில் காணலாம்.
முன்விபக்தி | நிச்சய பெயர்ச்சொற்குறி | |||
o | a | os | as | |
de | do | da | dos | das |
em | no | na | nos | nas |
por | pelo | pela | pelos | pelas |
a | ao | à | aos | às |
para | prò1, pro1 | prà1, pra1 | pròs1, pros1 | pràs1, pras1 |
1 பேச்சுவழக்கில் மட்டும் உள்ளவை
முன்விபக்தி | நிச்சயமற்ற பெயர்ச்சொற்குறி | |||
um | uma | uns | umas | |
de | dum | duma | duns | dumas |
em | num | numa | nuns | numas |