பிரெடெரிக் ஏபெல்
சர் பிரெடெரிக் அகஸ்டஸ் ஏபெல் (Sir Frederick Augustus Abel) (17 ஜூலை 1827 – 6 செப்டம்பர் 1902) ஒரு ஆங்கில வேதியியலாளர் ஆவார். இவர் வெடிபொருட்களின் முன்னணி பிரித்தானிய நிபுணராக அங்கீகரிக்கப்பட்டவர் ஆவார். இவரது சிறந்த கண்டுபிடிப்பாக கார்டைட் அறியப்படுகிறது. துப்பாக்கிக்கான வெடிமருந்தாக முன்பு பயன்படுத்தப்பட்ட வெடிமருந்திற்குப் பதிலாக இந்த கார்டைட்டு பயன்படுத்தப்பட்டது.
பிறப்பு | இலண்டன், இங்கிலாந்து, ஐக்கிய இராச்சியம் | 17 சூலை 1827
---|---|
இறப்பு | 6 செப்டம்பர் 1902 ஒயிட்ஹால் கோர்ட், இலண்டன், இங்கிலாந்து, ஐக்கிய இராச்சியம் | (அகவை 75)
தேசியம் | பிரித்தானியர் |
துறை | வேதியியல் |
Alma mater |
|
துறை ஆலோசகர் | ஏ. டபிள்யூ வான் ஆப்மேன் |
அறியப்பட்டது | கார்டைட்டு |
பரிசுகள் | இராயல் பதக்கம் (1877) ஆல்பர்ட் பதக்கம்(1891) |
கல்வி
தொகுஜொஹான் லியோபோல்ட் ஆபெலின் மகனாக லண்டனில் பிறந்த ஆபெல், வெஸ்ட்மின்ஸ்டர் பல்கலைக்கழக பல்தொழில்நுட்பக் கல்லூரியில் வேதியியல் பயின்றார், மேலும் 1845 ஆம் ஆண்டில் வேதியியலுக்கான இராயல் கல்லூரியில் ஏ.டபிள்யூ. வான் ஹோஃப்மேனின் முதன்மையான 26 மாணவர்களில் ஒருவரானார்.[1] 1852 ஆம் ஆண்டில் வூல்விச்சின் ராயல் இராணுவ அகாதெமியில் வேதியியலில் விரிவுரையாளராக நியமிக்கப்பட்டார். மைக்கேல் ஃபாரடேவிற்குப் பிறகு, 1829 முதல் அந்தப் பதவியை வகித்தார்.
ஆரம்ப கால வாழ்க்கை
தொகு1854 முதல் 1888 வரை ஆபெல் வூல்விச்சில் உள்ள ராயல் அர்செனலின் வெடிபொருட்களில் முன்னணி பிரித்தானிய நிபுணராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, அரசாங்கத்தின் போர் துறைக்கு வேதியியல் நடுவராகவும் நியமிக்கப்பட்டார். 1888 ஆம் ஆண்டு வரை நீடித்த இந்தப் பணியில் வெடிபொருட்களின் வேதியியல் தொடர்பாக அவர் ஒரு பெரிய அளவிலான பணிகளை மேற்கொண்டார்.
குறிப்பிடத்தக்க பணி
தொகுஅவரது ஆய்வுகளில் மிக முக்கியமான ஒன்று நைட்ரோ செல்லுலோசு தயாரிப்போடு தொடர்புடையதாகும். மேலும் இவர் முக்கியமாக நைட்ரோ ஏற்றம் செய்யப்பட்ட பருத்தியை நன்றாக கூழ் வரை ஒடுக்குவதை உள்ளடக்கிய ஒரு செயல்முறையை உருவாக்கினார். இந்த செயல்முறையானது பாதுகாப்பாக தயாரிப்பு முறைக்கு உதவியதோடு, அதிகரிக்கப்பட்ட பயன்பாடுகளைக் கொண்ட விளைபொருளை உருவாக்குவதாகவும் இருந்தது. 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் பொதுவான பயன்பாட்டிற்கு வந்த "புகையற்ற வெடிமருந்து" தயாரிப்பிற்கு இந்தப் பணி ஒரு முக்கியமான அளவிற்கு வழிவகுத்தது; கோர்டைட், 1891 இல் பிரித்தானிய அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இவரும் சர் ஜேம்சு தீவாரும் இணைந்து கார்டைட்டைக் கண்டுபிடித்தனர். ஆல்பிரட் நோபல் தான் முன்னதாகக் கண்டுபிடித்து வைத்திருந்த பேலிசைட்டு என்ற காப்புரிமம் பெற்ற வெடிபொருளின் காப்புரிமையை மீறி விட்டதாக பிரெடெரிக் ஏபெல் மற்றும் ஜேம்சு தீவார் மீது வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு முதற்கட்ட விசாரணை மற்றும் மேல்முறையீடு ஆகியவற்றின் போது ஆல்பிரட் நோபலின் காப்புரிம ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருந்த “நன்கு அறியப்பட்ட கரையக்கூடிய வகையாக” என்ற தொடரால் தோல்வியைத் தழுவியது. இந்த வழக்கு இறுதியாக ஐக்கிய இராச்சியத்தின் பிரபுக்கள் அவையை அடைந்தது. அங்கும் ஆல்பிரட் நோபல் தோல்வியைத் தழுவினார்.[2][3] பிரித்தானிய அரசாங்கத்தின் வேண்டுகோளின் பேரில், பெட்ரோலிய விளைபொருள்களின் தீப்பற்று வெப்பநிலையை தீர்மானிப்பதற்கான ஒரு வழிமுறையான ஏபெல் சோதனையை இவர் வகுத்தார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Greenwood, Douglas (1999). Who's Buried where in England (Third ed.). Constable. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-09-479310-7.
- ↑ Schuck & Sohlman 1929, ப. 136–144
- ↑ Schuck & Sohlman 1929, Appendix I: Alfred Nobel's English lawsuit. Mr justice Romer's judgment in the "Cordite Case"