பிரெட் வின்சுடன்

அமெரிக்க மரபியல் துறை பேராசிரியர்

பிரெட் மார்சல் வின்சுடன் (Fred Marshall Winston) ஆர்வார்டு மருத்துவப் பள்ளியின் மரபியல் துறையில் பேராசிரியராகப் பணிபுரிந்தார். அங்கு இவர் 1983 ஆம் ஆண்டு முதல் ஆசிரிய உறுப்பினராகவும் இருந்து வருகிறார். [1] வின்சுடன் ஆய்வகத்தில் மரபு படியெடுத்தல், சாக்கரோமைசசு செரிவிசியா என்ற வளரும் நுரைமம், இசுகிசோசாக்கரோமைசசு போம்பே என்ற பிளவு நுரைமம் ஆகியவற்றில் மரபுக்கூறு கட்டமைப்பை ஒழுங்குபடுத்துவதில் கவனம் செலுத்தியுள்ளது. முனைவர் வின்சுடன் 2009 ஆம் ஆண்டில் அமெரிக்க மரபியல் சங்கத்தின் தலைவராக பணியாற்றினார். 2009 ஆம் ஆண்டு அமெரிக்க கலை மற்றும் அறிவியல் அகாதமிக்கும் 2013 ஆம் ஆண்டு தேசிய அறிவியல் அகாதமிக்கும் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

முனைவர் வின்சுடன் அமெரிக்க மரபியல் சமூகப் பத்திரிகையில் ஒரு மூத்த ஆசிரியராகப் பணியாற்றினார். மரபியல் மற்றும் அமெரிக்க மரபியல் சமூக வெளியீடுகள் குழுவின் தலைவராகவும் இருந்தார்.

முனைவர் வின்ஸ்டன் 1974 ஆம் ஆன்டு சிகாகோ பல்கலைக்கழகத்தில் உயிரியலில் பிஏ பட்டம் பெற்றார். 980 ஆம் ஆண்டில் மாசசூசெட்சு தொழில்நுட்ப நிறுவனத்தில் முனைவர் பட்டம் பெற்றார். அங்கு இவர் ஒரு பாக்டீரியம் அதன் மரபணுவில் பாக்டீரியா உண்ணி பி 22 ஒருங்கிணைக்கப்படும் செயல்முறை குறித்து முனைவர் டேவிட் போட்சுடீனுடன் இணைந்து ஆராய்ச்சி நடத்தினார். [2] கார்னெல் பல்கலைக்கழகத்திலும் உயிரியல் மருத்துவ ஆராய்ச்சிக்கான ஒயிடெட்டு நிறுவனத்திலும் முனைவர் இயெரால்டு பிங்க் உடன் சேர்ந்து முனைவர் பட்ட மேற்படிப்பில் ஈடுபட்டார். [3] [4]

மேற்கோள்கள் தொகு

  1. "Fred Winston". National Academy of Sciences. பார்க்கப்பட்ட நாள் 2018-09-20.
  2. Winston F, Botstein D. (1981). Control of lysogenization by phage P22. II. Mutations (clyA) in the cl gene that cause increased lysogenization. J Mol Biol. 152(2):233-45.
  3. Winston F, Chaleff DT, Valent B, Fink GR. (1984). Mutations affecting Ty-mediated expression of the HIS4 gene of Saccharomyces cerevisiae. Genetics 107:179-97.
  4. Winston F, Durbin KJ, Fink GR. (1984). The SPT3 gene is required for normal transcription of Ty elements in S. cerevisiae. Cell 39:675-82.

புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரெட்_வின்சுடன்&oldid=3293486" இலிருந்து மீள்விக்கப்பட்டது