பிரென்ஃப்ஃக்
பிரைன்ஃபக் என்பது 1993 ஆம் ஆண்டில் அர்பன் முல்லர் என்ற கணினி வல்லுனரால் உருவாக்கப்பட்ட ஒரு மறைமுக நிரலாக்க மொழியாகும். [1]
நிரலாக்கக் கருத்தோட்டம்: | மறை நிரல்மொழி , கட்டளை நிரல், கட்டமைக்கப்பட்ட நிரல் |
---|---|
வெளியிடப்பட்டது: | செப்டம்பர் 1993 |
வடிவமைப்பாளர்: | அர்பன் முல்லர் |
இயல்பு முறை: | தட்டச்சு இல்லாதது |
பிறமொழித்தாக்கங்கள்: | P′′, |
கோப்பு நீட்சி: | .b, .bf |
இம்மொழித்தாக்கங்கள்: | மால்போல்ஜ் நпенисмммммммссс!!!! |
இந்த நிரல் மொழி எட்டு எளிய கட்டளைகளை மட்டுமே கொண்டதாகும். ஒரு வழிகாட்டி குறிப்பினை கொண்டுள்ளது. இம்மொழி முழுமையானது தான் என்றாலும், அது நடைமுறை பயன்பாட்டிற்கோ, கணினி மென்பொருள் உருவாக்கத்திற்க்கோ உகந்தது அல்ல, மாறாக பிற கணினி நிரலாளர்களுக்கு சவாலாகவும், மறைபொருளை கண்டறியவும் இம்மொழி பயன்படுகிறது.
பெயர்க்காரணம்
தொகுஇந்த நிரல் கொச்சைச்சொல் மொழியின்(பிரைன்ஃபக்) பெயரே ஒரு மறைபொருளைக் குறிப்பாகக் கொண்டுள்ளது. இது ஒருவரின் புரிதலின் அல்லது சிந்தனைத்திறனையோ, அறிவுத்திறமையையோ அல்லது மூளையின் செயல்பாட்டுத்திறனையோ அதன் வரம்புகளை மீறி சிந்திப்பதையும், மிகவும் சிக்கலான அல்லது அசாதாரணமான விஷயங்களைக் குறிக்கவும் செய்கிறது. ஏனெனில் இம்மொழியின் நோக்கம் உண்மையான மென்பொருளை வடிவமைப்பதற்காக அல்ல, ஆனால் கணினி நிரலாக்கத்தின் எல்லைகளை கண்டறியவும், அதை மீறுவதற்காக அதை சவால் செய்வதுமே ஆகும். [2]
கட்டளை மொழியமைப்பு
தொகுஇம்மொழி எட்டு கட்டளைகளைக் கொண்டதாகும். எட்டு மொழி கட்டளைகள் ஒவ்வொன்றும் ஒரே எழுத்துக்களைக் கொண்டுள்ளன:
சிறப்பியல்பு | பொருள் |
---|---|
>
|
தரவு சுட்டியை ஒவ்வொன்றாக அதிகரிக்கவும் (வலதுபுறத்தில் உள்ள அடுத்த செல்லை சுட்டிக்காட்ட). |
<
|
தரவு சுட்டியை ஒவ்வொன்றாக குறைக்கவும் (இடதுபுறத்தில் உள்ள அடுத்த செல்லை சுட்டிக்காட்ட). |
+
|
தரவு சுட்டியில் பைட்டை ஒவ்வொன்றாக அதிகரிக்கவும். |
-
|
தரவு சுட்டியில் பைட்டை ஒவ்வொன்றாக குறைக்கவும். |
.
|
தரவு சுட்டியில் பைட்டை வெளியிடவும். |
,
|
உள்ளீட்டின் ஒரு பைட்டை ஏற்றுக்கொள்ளவும், தரவு சுட்டியில் அதன் மதிப்பை பைட்டில் சேமிக்கவும். |
[
|
தரவு சுட்டியில் உள்ள பைட் பூஜ்ஜியமாக இருந்தால், அறிவுறுத்தல் சுட்டியை அடுத்த கட்டளைக்கு முன்னோக்கி நகர்த்துவதற்கு பதிலாக, பொருத்தமான கட்டளைக்குப் பிறகு அதை கட்டளைக்கு முன்னோக்கி நகர்த்தவும். |
]
|
தரவு சுட்டியில் உள்ள பைட் அல்லாததாக இருந்தால், அறிவுறுத்தல் சுட்டியை அடுத்த கட்டளைக்கு முன்னோக்கி நகர்த்துவதற்கு பதிலாக, பொருத்தமான கட்டளைக்குப் பிறகு அதை மீண்டும் கட்டளைக்கு நகர்த்தவும் |
வரம்புகள் மற்றும் பயன்கள்
தொகு- டூரிங் முழுமைக் கோட்பாட்டின் படி இந்த நிரல்மொழி அமைக்கப்பட்டுள்ளது.
- கோட்பாட்டளவில் எந்தவொரு கணக்கிடக்கூடிய செயல்பாட்டையும் கணக்கிடவோ அல்லது வரம்பற்ற அளவு நினைவகத்திற்கான அணுகல் வழங்கப்பட்டால் வேறு எந்த கணக்கீட்டு மாதிரியையும் உருவகப்படுத்தவோ இம்மொழியால் முடியும்.[3]
- பிரைன்ஃபக் நிரல்களைப் புரிந்துகொள்வது மிகவும் கடினம். எந்தவொரு லேசான பணிக்கும் கட்டளைகளின் சிக்கலான நீண்ட வரிசை தேவைப்படும் [4]
- எந்தவொரு நிரலையும் எழுத இதைப் பயன்படுத்தலாம், ஆனால் நடைமுறையில் யாரும் பயன்படுத்துவதுஇல்லை, ஏனென்றால் இம்மொழி மிகக் குறைந்த சுருக்கமான வெளியீட்டையே வழங்குகிறது, மேலும் இதன் நிரல்கள் மிக நீளமாகவோ அல்லது சிக்கலாகவோ இருக்கும்.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ Easter, Brandee (2020-04-02). "Fully Human, Fully Machine: Rhetorics of Digital Disembodiment in Programming". Rhetoric Review 39 (2): 202–215. doi:10.1080/07350198.2020.1727096. பன்னாட்டுத் தர தொடர் எண்:0735-0198.
- ↑ "The Brainfuck Programming Language". Muppetlabs.com. பார்க்கப்பட்ட நாள் 2023-04-30.
- ↑ "BF is Turing-complete". Iwriteiam.nl. பார்க்கப்பட்ட நாள் 2023-04-30.
- ↑ "Index of /esoteric/brainfuck/bf-source/prog". sange.fi. 2002-01-22. பார்க்கப்பட்ட நாள் 2023-04-30.
- ↑ "brainfuck interpreter". Daniel B. Cristofani.