பிரேந்திர இலாக்ரா
பிரேந்திர இலாக்ரா (Birendra Lakra) (பிறப்பு: 3 பிப்ரவரி 1990) ஓர் இந்தியத் தொழில்முறை வளைதடிபந்தாட்ட வீரர் ஆவார். இவர் இலண்டனில் நடந்த 2012 ஒலிம்பிக் விளையாட்டுகளில் இந்தியா சார்பில் வளைதடிபந்தாட்டக் குழுவில் கலந்துகொண்டார்.[1] இவரது அண்ணன் பிமல் இந்தியா சார்பில் நடுக்கள ஆட்டக்காரராக விளையாடினார். இவரது தங்கை அசுந்தா இலாக்ரா இந்திய மகளிர் வளைதடிபந்தாட்டக் குழுவில் விளையாடித் தலைமையும் ஏற்றார்.[2]
தனித் தகவல் | ||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பிறப்பு | பெப்ரவரி 3, 1990 உரூர்கெலா, ஒடிசா, இந்தியா | |||||||||||||||||||||||||||||||||
உயரம் | 167 cm (5 அடி 6 அங்) (5 அடி 6 அங்) | |||||||||||||||||||||||||||||||||
எடை | 68 கிலோகிராம்கள் (150 lb) | |||||||||||||||||||||||||||||||||
விளையாடுமிடம் | முழுபிற்காப்பு | |||||||||||||||||||||||||||||||||
மூத்தவர் காலம் | ||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | தோற்றம் | (கோல்கள்) | |||||||||||||||||||||||||||||||
2012–அண்மை வரை | சண்டிகார் வால்வெள்ளிகள் | |||||||||||||||||||||||||||||||||
BPCL | ||||||||||||||||||||||||||||||||||
–2008 | ஒரிசா எஃகர்கள் | |||||||||||||||||||||||||||||||||
2013–2014 | இராஞ்சி நீர்யானைகள் | 15 | (0) | |||||||||||||||||||||||||||||||
2015–அண்மை வரை | இராஞ்சிக் கதிர்கள் | |||||||||||||||||||||||||||||||||
தேசிய அணி | ||||||||||||||||||||||||||||||||||
– அண்மை வரை | இந்தியா | 71 | (7) | |||||||||||||||||||||||||||||||
பதக்க சாதனை
| ||||||||||||||||||||||||||||||||||
Last updated on: 8 திசம்பர் 2015 |
இளமை
தொகுஇவர் ஜார்க்காண்டு மாநிலத்தில் சிம்தேகா மாவட்டத்தில் 1990 பிப்ரவரி 3 இல் பிறந்தார். இவர் குரூக்கியரில் ஓரவான் இனக்குழுவில் பிறந்தார். இவரது குடும்பம் ஒடிசா அருகில் உள்ள ஜார்க்காண்டு மாநிலத்தில் நோங்கடா எனும் ஊரில் வாழ்ந்தது.
இந்திய வளைதடிப்பந்தாட்டக் குழு
தொகுஇந்திய வளைதடிப்பந்தாட்டக் குழுவின் தொடக்க ஏலத்தில் இராஞ்சி குழுமம் இலாக்ராவை 41,000 அமெரிக்க டாலருக்கு எடுத்தது.[3] இவரது அடிப்படைக் கோரல் மதிப்பு 9,250 அமெரிக்க டாலராகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "London Olympics 2012: Player profile". Archived from the original on 2013-05-11. பார்க்கப்பட்ட நாள் 2016-09-09.
- ↑ "New Indian women’s hockey captain: Asunta from Lakra family of Simdega!". Bihar Days. 2011-12-01. http://www.bihardays.com/new-indian-womens-hockey-captain-asunta-lakra-family-simdega/. பார்த்த நாள்: 2013-01-17.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Hockey India League Auction: the final squads list". CNN-IBN. 2012-12-16 இம் மூலத்தில் இருந்து 2012-12-19 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121219014754/http://ibnlive.in.com/news/hil-auction-as-the-teams-shape-up/310745-5-136.html. பார்த்த நாள்: 2013-01-17.
வெளி இணைப்புகள்
தொகு- Birendra Lakra பரணிடப்பட்டது 2017-05-09 at the வந்தவழி இயந்திரம் at Hockey India