பிர்ச் ஒடுக்கவினை
கரிம வேதியியலில் பிர்ச் ஒடுக்கவினை (Birch reduction) என்பது அரீன்களை வளையயெக்சாடையீன்களாக மாற்றப் பயன்படும் ஒரு கரிம வினை ஆகும். இந்த வினையை, ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் டைசன் பெரின்சு ஆய்வகத்தில் பணிபுரிந்த ஆத்திரேலிய வேதியியலாளரான ஆர்தர் பிர்ச் (1915-1995) என்பவர் கண்டறிந்து அறிவித்தார்.[1] இந்தக் கண்டுபிடிப்பானது 1937 ஆம் ஆண்டுகளில் ஊசுட்டர், காட்ஃப்ரே என்பவர்களால் செய்யப்பட்ட முந்தைய அடிப்படைகளின் மீது அமைந்ததாகும்.[2]
பிர்ச் ஒடுக்க வினை | |
---|---|
பெயர் மூலம் | ஆர்த்ர் பிர்ச் |
வினையின் வகை | கரிம ஒடுக்க-ஏற்ற வினை |
இனங்காட்டிகள் | |
கரிமவேதியியல் வலைவாசல் | birch-reduction |
RSC சுட்டெண் | RXNO:0000042 |
இது கார உலோகத்துடனும் (வழக்கமாக சோடியம்) ஒரு புரோட்டான் மூலத்துடனும் (வழக்கமாக மதுசாரம்), ஒரு அமீன் கரைப்பானில் (வழக்கமாக திரவ அமோனியா) உள்ள அரோமாட்டிக்கு வளையங்களின் கரிம ஆக்சிசனேற்ற வினை ஆகும். வினைவேக மாற்ற ஐதரசனேற்றம் போலல்லாமல், பிர்ச் ஒடுக்க-ஏற்ற வினை அரோமாட்டிக்கு வளையத்தை வளையஎக்சேன் வரை குறைக்காது.
எடுத்துக்காட்டு: அமோனியா மற்றும் எத்தனாலில் நாப்தலீனின் ஒடுக்கம்:
மேற்கோள்கள்
தொகு- ↑ Birch, A. J. (1944). "Reduction by dissolving metals. Part I". J. Chem. Soc.: 430. doi:10.1039/JR9440000430.
- ↑ Wooster, C. B.; Godfrey, K. L. (1937). "Mechanism of the Reduction of Unsaturated Compounds with Alkali Metals and Water". Journal of the American Chemical Society 59 (3): 596. doi:10.1021/ja01282a504.