பிறப்பிடச் சான்றிதழ்

பிறப்பிடச் சான்றிதழ் (Nativity Certificate) இந்தியாவில் மாநில அரசுகள் வருவாய்த்துறை வாயிலாக வழங்கப்படும் சான்றிதழ் ஆகும். ஒருவர் தான் ஒரு இந்தியக் குடிமகன் என்பதை நிருபிக்க தேவையான தேசிய அல்லது மாநில அரசுகளின் அடையாள அட்டைகள் இல்லாத போது, பிறப்பிடச் சான்றிதழ் வேண்டி, மாநில அரசின் வருவாய்த் துறையினரிடம் விண்ணப்பிக்க வேண்டும். அவ்வாறு பிறப்பிடச் சான்றிதழ் கோரி விண்ணப்பிப்பவரின் குருதி தொடர்பான உறவினர்களான பெற்றோர் அல்லது தாத்தா-பாட்டிகள் போன்றோர் குறிப்பிட்ட இந்திய மாநிலத்தில் வாழ்ந்திருக்க வேண்டும்.

பிறப்பிடசான்றிதழ் இருந்தால் மட்டுமே கடவுச்சீட்டு, குடிமைப் பொருள் அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை மற்றும் மத்திய மாநில அரசுகளின் சலுகைகள் துய்க்க இயலும்.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-03-13. பார்க்கப்பட்ட நாள் 2015-03-04.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிறப்பிடச்_சான்றிதழ்&oldid=3563783" இலிருந்து மீள்விக்கப்பட்டது