பிறை (சிற்றிதழ்)

பிறை இந்தியா தமிழ்நாடு சென்னையிலிருந்து 1956ம் ஆண்டு முதல் வெளிவந்த ஒரு மாத இதழாகும். இவ்விதழ் கலை இலக்கிய ரீதியாகவும், இசுலாமிய ஆக்கங்கள் ரீதியாகவும் வாசகரிடம் குறிப்பாக முஸ்லிம்களிடம் ஒரு செல்வாக்குப் பெற்றிருந்ததாக விளங்கியது.

ஆசிரியர் தொகு

  • மௌலானா அப்துல் வஹ்ஹாப் சாகிப்.

இவர் ஒரு பன்னூலாசிரியரும், தர்ஜமதுல் குர்ஆன் என்ற திருக்குர்ஆனின் தமிழாக்கத்தை வெளியிட்டவருமாவார். சிறந்த சன்மார்க்கப் பேச்சாளர். கீழ்த்திசை நாடுகளில் பிரசாரப் பயணம் மேற்கொண்டவர். இஸ்லாமியத் தமிழ் இலக்கிய அனைத்து மாநாடுகளிலும் சொற்பொழிவாற்றியுள்ளார். தமிழ் முஸ்லிம் அறிஞர்களில் மிகவும் பிரபல்யமான பன்மொழிப் புலவர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிறை_(சிற்றிதழ்)&oldid=797877" இலிருந்து மீள்விக்கப்பட்டது