பிலார் உருயிசு இலாபுயெந்தே
பிலார் உருயிசு இலாபுயெந்தே Pilar Ruiz-Lapuente (பிறப்பு: 1964, பார்சிலோனா) ஓர் எசுப்பானிய வானியற்பியலாளர் ஆவார். இவர் பார்சிலோனா பல்கலைக்கழகப் பேராசிரியராகப் பணிபுரிகிறார். இவர் வகை 1ஏ (Ia ) மீப்பெரு விண்மீன் வெடிப்புகளை ஆய்வு செய்கிறார். இவர் 2004 இல் டைக்கோ பிராகியும் பிறரும் நோக்கிய வெண்குறுமீனின் துணையாக அமைந்த விண்மீனைக் கண்டுபிடித்த குழு உறுப்பினர் ஆவார். பின்னர், இவ்விண்மீன் SN 1572 எனும் மீப்பெரு விண்மீன் வெடிப்பாகியது. இவரது மீப்பெரு விண்மீன் வெடிப்பு ஆராய்ச்சி புடவியின் முடுங்குநிலை விரிவாக்கத்தைக் கண்டறிய வழிவகுத்தது.
பிலார் உருயிசு இலாபுயெந்தே Pilar Ruiz-Lapuente | |
---|---|
உருயிசு இலாபுயெந்தே, 2013 | |
பிறப்பு | பார்சிலோனா, எசுப்பானியம் | 18 மே 1964
கல்வி கற்ற இடங்கள் | பார்சிலொனா பல்கலைக்கழகம் |
அறியப்படுவது | வானியல் ஆய்வு |
வாழ்க்கைப்பணி
தொகுஉருயிசு இலாபுயெந்தே பார்சிலோனா பல்கலைக்கழகத்தில் இய்ற்பியலில் இளவல் பட்டத்தைப் பெற்றுள்ளார். பிறகு முனைவர் பட்டத்தைப் பார்சிலோனா பல்கலைக்கழகத்திலும் மாக்சு லிளாங்க் வானியற்பியல் நிறுவனத்திலும் ஐரோப்பிய தெற்கு வான்காணகத்திலும் முடித்துள்ளார்.[1] இவர் பின்னர் ஆர்வார்டு சுமித்சோனிய வானியற்பியல் மையத்தில் ஆய்வு மாணவராகச் சேர்ந்துள்ளார்.ரிவர் 2012 இல் இருந்து, பார்சிலோனா பல்கலைக்கழகத்தில் வானியல், வானிலையியல் துறையின் பேராசிரியராக உள்ளார்.
ஆராய்ச்சியும் முடுங்குநிலைப் புடவியும்
தொகுஇவர் மீவிண்மீன் வெடிப்பு அண்டவியல் திட்டத்தின் இரண்டு ஆய்வுக்குழுக்களில் ஒன்றில் உறுப்பினர் ஆவார். இக்குழுக்கள் எதிர்பாராவகையில் 1998 இல் புடவி முடுங்கியநிலையில் விரிவுறுவதாக கண்டறிந்தன.[2] இக்குழுக்கள் இதி வகை 1ஏ மீவிண்மீன் வெடிப்புகளின் ஆய்வுவழி கண்டுபிடித்தனர். இந்த முடுக்க விரிவுக்கு கருப்பு ஆற்றலே காரணம் என விளக்கினர்.[1]
இவர் தன் பணியைப் பற்றிக் கூறுகிறார்...
நான் கானரித் தீவில் உள்ள இலா பால்மாவில் உரோக் தெ லாசு முச்சாச்சோசு வான்காணகத் தொலைநோக்கிகளைப் பயன்படுத்தி பணிசெய்து கொண்டிருந்தேன். நான் கண்டுபிடித்த வான்பொருள்களைக் கண்காணித்து அவற்றில் இருந்து வெளியேறும் கதிர்நிரல்களையும் ஒளிவளைவுகளையும் பெற்றேன். மேலும் குழுவின் கூட்டுப் பகுப்பாய்வுகளிலும் உதவினேன்...நாங்கள் நோக்கீடுகளை ஒவ்வொரு 15 நாளுக்கு ஒருமுறை செய்தோம். முதலில், நாங்கள் மேற்கோள் படங்களை எடுப்போம். பின்னர் 15 நாட்கள் கழித்து சில புதியவற்றை எதிர்பார்ப்போம். எனவே இருபோதும் எடுத்த படங்களையும் ஒப்பிட்டு மாறும் வான்பொருள்களை கண்டு அவற்றை மீவிண்மீன் வெடிப்புகளாக இனங்காண்போம். அவை கண்டுபிடிக்கப்பட்டதும் அவற்றைத் தொடர்ந்து கண்காணிப்போம்.[1]
இந்தக் கண்டுபிடிப்பால், பிலார் உருயிசுவும் மீவிண்மீன் வெடிப்பு அண்டவியல் திட்டக் குழுவின் உறுப்பினர்களும் உயர்-z மீவிண்மீன் தேட்ட இணைக்கண்டுபிடிப்பாளர்களும் 2007 இல் அண்டவியலுக்கான குரூபர் பரிசையும் 2015 இல் அடிப்படை இயற்பியல் பெருந்தகவுப் பரிசையும் பெற்றனர்.[2][3] இவரது ஆய்வு இவரது குழுவின் முன்னணி ஆய்வாளராகிய சவுல் பெரிமட்டருக்கு நோபல் பரிசை வழங்க வைத்தது. சவுல் பெரிமட்டர் உயர்-z மீவிண்மீன் தேட்டக் குழுவின் இணக்கண்டுபிடிப்பாளர்களோடு இணைந்து இந்த நோபல் பரிசைப் பெற்றார்.[4]
வெளியீடுகள்
தொகுஇவர் 2012 வரை 130 ஆய்வுக் கட்டுரைகளுக்கு மேலாக ஆய்விதழ்களில் வெளியிட்டுள்ளார்.[1] இவற்றில் இயற்கை இதழிலும் அறிவியல் இதழிலும் வெளியிட்டனவும் அடங்கும்.[5][6] பல ஆய்வுக் கட்டுரைகளில் அடிக்கடி சான்று காட்டப்படும் கட்டுரைகளாக, "Tycho Brahe's supernova: light from centuries past", "Type Ia supernova scenarios and the Hubble sequence" ஆகியவை அமைகின்றன.[7][8]
இவர் "El enigma de la realidad. Las entidades de la física de Aristóteles a Einstein" எனும் தலைப்பில் ஒரு நூலையும் எழுதியுள்ளார்.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 "Pilar M.ª Ruiz Lapuente, Institute of Cosmos Sciences of the University of Barcelona: "With the current data, the Universe will keep growing indefinitely"". Universitat de Barcelona. Universitat de Barcelona. Archived from the original on 30 July 2018. பார்க்கப்பட்ட நாள் 30 July 2018.
- ↑ 2.0 2.1 "2007 Gruber Cosmology Prize Press Release: A crazy result delivers the $500,000 Gruber Cosmology Prize to two teams who discovered the accelerating universe". The Gruber Foundation. The Gruber Foundation. Archived from the original on 30 July 2018. பார்க்கப்பட்ட நாள் 30 July 2018.
{{cite web}}
:|archive-date=
/|archive-url=
timestamp mismatch (help) - ↑ "RECIPIENTS OF THE 2015 BREAKTHROUGH PRIZES IN FUNDAMENTAL PHYSICS AND LIFE SCIENCES ANNOUNCED". breakthroughprize.org. Breakthrough Prize. Archived from the original on 31 July 2018. பார்க்கப்பட்ட நாள் 31 July 2018.
- ↑ "The lecturer M. Pilar Ruiz Lapuente contributes to the research behind the Nobel Prize in Physics 2011". www.ub.edu. Universitat de Barcelona. Archived from the original on 31 ஜூலை 2018. பார்க்கப்பட்ட நாள் 31 July 2018.
{{cite web}}
: Check date values in:|archivedate=
(help) - ↑ Ruiz-Lapuente, Pilar; Comeron, Fernando; Méndez, Javier; Canal, Ramon; Smartt, Stephen J; Filippenko, Alexei V; Kurucz, Robert L; Chornock, Ryan et al. (2004). "The binary progenitor of Tycho Brahe's 1572 supernova". Nature 431 (7012): 1069–1072. doi:10.1038/nature03006. பப்மெட்:15510140.
- ↑ Ruiz-Lapuente, P (1997). "ASTROPHYSICS: Enhanced: The Quest for a Supernova Companion". Science 276 (5320): 1813–1814. doi:10.1126/science.276.5320.1813.
- ↑ Ruiz-Lapuente, Pilar (2004). "Tycho Brahe's Supernova: Light from Centuries Past". The Astrophysical Journal 612: 357–363. doi:10.1086/422419.
- ↑ Ruiz-Lapuente, R.; A. Burkert; R. Canal (1995). "Type Ia Supernova Scenarios and the Hubble Sequence". The Astrophysical Journal 447 (2). doi:10.1086/309564.