பிலிபித் புலிகள் காப்பகம்
பிலிபித் புலிகள் காப்பகம் (Pilibhit Tiger Reserve) இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தின் பிலிபித் மாவட்டத்தில் அமைந்துள்ளது. 2014 ஆம் ஆண்டில் இது புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது.[1] இக்காப்பகம் இந்தியா - நேபாள எல்லையில் மேல் கங்கை சமவெளியில் உள்ள தெராய் வளைவு நிலப்பரப்பின் ஒரு பகுதியாகும். இந்த வாழ்விடத்தின் சிறப்பியல்புகள் சால் காடுகள் , உயரமான புல்வெளிகள், சதுப்பு நிலங்கள் , அவ்வப்போது ஆறுகளில் இருந்து வரும் வெள்ளத்தால் வளமாக்கப்படுகின்றன. இங்குள்ள. சார்தா சாகர் அணை 22 கிமீ (14 மைல்) நீளம் வரை நீண்டு உள்ளது.[2]
பிலிபித் புலிகள் காப்பகம் Pilibhit Tiger Reserve | |
---|---|
ஐயுசிஎன் வகை IV (வாழ்விடம்/இனங்களின் மேலாண்மைப் பகுதி) | |
பிலிபித் புலிகள் காப்பகத்தில் காடு | |
அமைவிடம் | பிலிபித் மாவட்டம் |
ஆள்கூறுகள் | 28°41′31″N 79°51′11″E / 28.692°N 79.853°E |
அறிவிக்கப்பட்டது | சூன் 2014 |
நிருவாக அமைப்பு | தேசியப் புலிகள் பாதுகாப்பு ஆணையம் |
வலைத்தளம் | https://pilibhittigerreserve.in/ |
உத்தரப்பிரதேசத்தில் நன்கு காடுகள் நிறைந்த சில மாவட்டங்களில் பிலிபித் ஒன்றாகும். 2018 ஆம் ஆண்டின் மதிப்பீட்டின்படி பிலிபித் மாவட்டத்தில் 800 km2 (310 sq mi) சதுர கிலோமீட்டருக்கும் ( மைல்) அதிகமான காடுகள் உள்ளன , இது மாவட்டத்தின் மொத்த பரப்பளவில் சுமார் 23% ஆகும். பிலிபித் காடுகளில் குறைந்தது 65 புலிகளும் ஐந்து வகையான மான்களும் ஓர் ஒரு இரையும் உள்ளன. குறிப்பிட்ட நேரத்தில் புலிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கியதற்காக புலிகள் காப்பகத்திற்கு முதல் பன்னாட்டு விருது TX2(டிஎக்ஸ் 2) கிடைத்தது.[3]
2014 ஜூன் மாதம் 46வது புலிகள் காப்பகமாக அறிவிக்கப்படும் வரை இந்தப் பாதுகாக்கப்பட்ட பகுதி மரங்கள் விளைவிக்கும் காப்புக்காடாக இருந்தது.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Chanchani, P. (2015). "Pilibhit Tiger Reserve: conservation opportunities and challenges". Economic and Political Weekly 50 (20): 19.Chanchani, P. (2015). "Pilibhit Tiger Reserve: conservation opportunities and challenges". Economic and Political Weekly. 50 (20): 19.
- ↑ "Pilibhit Tiger Reserve". Reserve Guide - Project Tiger Reserves In India. National Tiger Conservation Authority. பார்க்கப்பட்ட நாள் 2012-02-29.
- ↑ "Pilibhit Tiger Reserve Gets Global Award For Doubling Tiger Population". NDTV.com. பார்க்கப்பட்ட நாள் 2020-11-29.