பிலிப்பைன்ஸ் நாட்டில் தேங்காய் உற்பத்தி

பிலிப்பைன்ஸ் நாட்டின் தேங்காய் உற்பத்தி பிலிப்பைன்ஸ்ப்பொருளாதாரத்தில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. உலக அளவில் பிலிப்பைன்ஸ் தேங்காய் உற்பத்தியில் முதன்மை உற்பத்தியாளராக திகழ்கிறது . 2009ல் பிலிப்பைன்ஸ் நாட்டின் உற்பத்தி 19,500,000 டன்களாக இருந்தது என ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தேங்காய் உற்பத்தி இந்நாட்டில் பெரும்பாலும் நடுத்தர அளவிலான பண்ணை நிலங்களில் உற்பத்தி செய்ய படுகிறது .தேங்காய் உற்பத்தி ஊக்கப்படுத்தவும் ,சிறந்த சாகுபடி முறைகளை ஆராய்ந்து தேங்காய் பயிர் செய்யும் விவசாயிகளுக்கு உதவவும் பிலிப்பைன்ஸ் தேங்காய் ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது

பங்களோ தீவில் உள்ள ஒரு தென்னை மரம்

வரலாறு

தொகு

ஐக்கிய நாடுகளின் பொருளாதார ஆணையத்தின் அறிக்கை மூலம் தேங்காய் உற்பத்தி பிலிப்பைன்ஸ் நாட்டில் 1911 ஆம் ஆண்டு முதல் 1929 ஆம் ஆண்டு வரை, ஆண்டுக்கு 5.3 சதவிகித வளர்ச்சியும் 1952 ஆம் ஆண்டு முதல் 1966 ஆம் ஆண்டு வரை ஆண்டுக்கு 5.2 சதவிகித வளர்ச்சியும் அடைந்திருந்தது.1995 ஆம் ஆண்டு 6 .5 சதவிகித ஆண்டு வளர்ச்சியடைந்து உலகளவில் தேங்காய்த உற்பத்தியில் தலைசிறந்து விளங்கும் இந்தோனேசியா நாட்டை விட மேம்பட்ட நிலை அடைந்தது பிலிப்பைன்ஸ்.
பிலிப்பைன்ஸ் நாட்டின் மொத்த விவசாய நிலத்தில் 25 சதவிகித நிலத்தில் தென்னை மரங்கள் பயிரிடப்படுகிறது .மேலும் நாட்டின் மொத்த மக்களத்தொகையில் சுமார் 25 முதல் 33 சதவிகித மக்கள் தேங்காய் உற்பத்தி மற்றும் அதனை சார்ந்த சேவைகளை தங்கள் வாழ்வாதாரமாக கொண்டு உள்ளனர். தேங்காய் சாகுபடியில் ஈடுபட்டு இருந்த விவசாய தொழிலாளர்கள் பெரும்பாலானோர் கல்வியறிவில் பின் தங்கியவர்களாகவும் கிராமப்புற தொழிலாளர்களாகவும் மிக குறைந்த அளவிலான ஊதியம் பெறுபவராகவும் இருந்தனர் .
உலக சந்தையில் கொப்பரை தேங்காய் தேவை அதிகரிக்க ஆரம்பமே பிலிப்பைன்ஸ் அரசாங்கம் கொப்பரை தேங்காய் பதப்படுத்துதல் மற்றும் தேங்காய் எண்ணெய் ஆலைகளை நிறுவுவதில் முனைப்பாக செயல்பட தொடங்கியது. மேலும் தேங்காய் எண்ணெய் ஆலைகளை நிறுவ முதலீடு ஊக்கிகள் கொடுக்கப்பட்டன . இதன் மூலம் 1968 ஆம் ஆண்டு 28 ஆக இருந்த ஆலைகளின் எண்ணிக்கை 1979 ஆம் ஆண்டு 62 ஆக உயர்ந்தது .
1990 களில் இருந்த தென்னனை மர பண்ணை சுமார் நான்கு ஹெக்டர் பரப்பளவு கொண்ட நடுத்தர பண்ணையாக இருந்தது. பண்ணைகளை குத்தகைக்கு விடாமல் விவசாய கூலிகளை கொண்டு தேங்காய்கள் சேகரிக்கப்பட்டன. பண்ணைகளில் வேலை செய்பவர்களுக்கு சேகரிக்கப்படும் தேங்காய்கள் எண்ணிக்கைக்குக்கேற்ப கூலிகள் கொடுக்கப்பட்டது. 1973 ஆம் ஆண்டு படைத்துறை ஆட்சி காலத்தின் போது தேங்காய் உற்பத்தி சார்ந்த அணைத்து திட்டங்களும் ஒன்றிணைக்கபட்டன பிலிப்பைன்ஸ் தேங்காய் ஆணையம் உருவாக்கப்பட்டது . பிலிப்பைன்ஸ் தேங்காய் ஆணையம் கொப்பரை தேங்காய் விற்பனை வரி வசூல் செய்வதுற்கு அதிகாரம் அளிக்கப்பட்டது. 1974 ஆம் ஆண்டு 100 கிலோவிற்கு ௦.55 பெசோவாக இருந்த வரி 20 பெசோவாக அதிகரிக்கப்பட்டது.1983 ஆம் ஆண்டு 25 முதல் 30 சதவிகித தென்னை மரங்களின் வயது 60 ஆண்டுகள் கடந்து இருந்தது .1988 ஆம் ஆண்டு இந்த விகிதசமம் 35 முதல் 40 சதவிகிதத்தை அடைந்தது. இவற்றில் பெருபாலான முதிர்ந்த மரங்களுக்கு ஈடாக புதிய மலேசியா மற்றும் மேற்கு ஆப்பிரிக்கா ஒட்டுரக மரக்கன்றுகள் நடப்பட்டன.

சான்றுகள்

தொகு