பிலிப் எர்பெர்ட் கோவெல்

கண்டுபிடித்த சிறுகோள்கள்: 1 [1]
4358 இலின் 5 அக்தோபர் 1909 MPC

பிலிப் எர்பெர்ட் கோவெல் (Philip Herbert Cowell) [2] (1870 – 1949) ஒரு பிரித்தானிய வானியலாளரும் அரசு கழக ஆய்வுறுப்பினரும் ஆவார்.[3][4][5]

இவர் இந்தியாவின் கொல்கத்தா நகரத்தில் 1870 ஆகத்து 7 இல் பிறந்தார். இவர் ஈட்டன் கல்லூரியிலும் கேம்பிரிட்ஜ் டிரினிட்டி கல்லூரியிலும் கல்வி பயின்றுள்ளார்.[6] இவர் 1896 இல் அரசு கிரீன்விச் வான்காணகத்தில் துணை முதன்மை உதவியாளரானார். பின்னர், இவர் 1910 இலிருந்து 1930 வரை எச். எம். நாவாய் வழிகாட்டு அட்டவணை அலுவலகத்தின் கண்காணிப்பாளராக ஆனார். இவர் வான்பொருள் இயக்கவியலில் குறிப்பாக, சிறுகோள், வால்வெள்ளி வட்டணை இயக்கத்தில் சிறப்புப் புலமை பெற்றார். இவர் நிலா இருப்பு பற்றிய கோட்பாட்டு, நோக்கீட்டுக் குழறுபடிகளை ஆழமாக ஆய்வு செய்தார்.

கோவெல் 1896 பிப்ரவரி 14 இல் அரசு வானியல் கழக ஆய்வுறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[7] இவர் 1897 அக்தோபர் 27 இல் பிரித்தானிய வானியல் கழக உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[8] இவர் 1906 மே 3 இல் அரசு கழக ஆய்வுறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][9] கோவெல் 1911 இல் அரசு வானியல் கழகப் பதககத்தினய்ப் பெற்றார்.

இவர்1909 இல் 4358 இலின் எனும் 10-கிலோமீட்டர் அளவுள்ள முதன்மைப் பட்டைச் சிறுகோளையும் இயூனோமியா உறுப்புப் பொருளையும் கண்டுபிடித்தார்.[10][11]

இவர்களுடைய ஆல்லே வால்வெள்ளி ஆய்வுக்காக 1910 இல் கோவெல்லும் d ஆந்திரூ கிளாடி தெ லா செரூ குரோம்மெலினும் இணைந்து பிரிக்சு யூல்சு ஜான்சன் எனும் பிரெஞ்சு வானிய்ல் கழகத்தின் மிக உயர்ந்த விருதையும் வானியல் நிறுவனத்தின் இலிண்டுமன் பரிசையும் பெற்றனர்.[12][13]

இவர் 1949 ஜூன் 6 இல் சப்போக்கில் உள்ள ஆல்டெபர்கில் இறந்தார். முதன்மைப் பட்டை 1898 கோவெல் சிறுகோள் இவரது நினைவாகப் பெயரிடப்பட்டது.[14]

மேற்கோள்கள் தொகு

  1. "Minor Planet Discoverers (by number)". Minor Planet Center. 23 May 2016. பார்க்கப்பட்ட நாள் 9 June 2016.
  2. 2.0 2.1 E. T. Whittaker (1949). "Philip Herbert Cowell 1870–1949". Obituary Notices of Fellows of the Royal Society 6 (18): 375–384. doi:10.1098/rsbm.1949.0003. 
  3. Jackson, J. (December 1949). "Obituary Notices : Cowell, Philip Herbert". Monthly Notices of the Royal Astronomical Society 110 (2): 125–128. doi:10.1093/mnras/110.2.125a. Bibcode: 1950MNRAS.110R.125.. 
  4. "Notes : Obituaries". The Observatory 69: 159–160. August 1949. Bibcode: 1949Obs....69..159.. 
  5. "General Notes". Publications of the Astronomical Society of the Pacific 61 (362): 241. October 1949. doi:10.1086/126191. Bibcode: 1949PASP...61..241.. 
  6. "Cowell, Philip Herbert (CWL889PH)". A Cambridge Alumni Database. University of Cambridge. 
  7. "1896MNRAS..56..174. Page 174". articles.adsabs.harvard.edu. பார்க்கப்பட்ட நாள் 2021-06-10.
  8. "1897JBAA....7..473. Page 473". articles.adsabs.harvard.edu. பார்க்கப்பட்ட நாள் 2021-06-10.
  9. "List of fellows of the Royal Society 1660–2007" (PDF). The Royal Society – Library and Information Services. p. 83. பார்க்கப்பட்ட நாள் 9 June 2016.
  10. "4358 Lynn (A909 TF)". Minor Planet Center. பார்க்கப்பட்ட நாள் 9 June 2016.
  11. "LCDB Data for (4358) Lynn". Asteroid Lightcurve Database (LCDB). Archived from the original on 5 ஆகஸ்ட் 2016. பார்க்கப்பட்ட நாள் 9 June 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  12. Cowell, Philip Herbert; Crommelin, Andrew Claude De la Cherois (1910). Essay on the return of Halleys comet. University of California Libraries. Leipzig, In kommission bei W. Engelmann. https://archive.org/details/essayonreturnofh00cowerich. 
  13. "1910JBAA...20..387. Page 391". articles.adsabs.harvard.edu. பார்க்கப்பட்ட நாள் 2021-06-10.
  14. Schmadel, Lutz D. (2007). "(1898) Cowell". Dictionary of Minor Planet Names – (1898) Cowell. Springer Berlin Heidelberg. பக். 152. doi:10.1007/978-3-540-29925-7_1899. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-3-540-00238-3. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிலிப்_எர்பெர்ட்_கோவெல்&oldid=3493357" இலிருந்து மீள்விக்கப்பட்டது