பிலிப் சைல்ட்சு கீனான்

அமெரிக்க வானியலாளர்

பிலிப் சைல்ட்சு கீனான் (Philip Childs Keenan) (1908 மார்ச் 31, –2000 ஏப்பிரல் 20,) ஓர் அமெரிக்க வானியலாளர்.

பிலிப் சைல்ட்சு கீனான்
Philip Childs Keenan
பிறப்பு(1908-03-31)மார்ச்சு 31, 1908
பெல்லெவியூ, பென்னிசில்வேனியா, அமெரிக்க ஒன்றிய நாடுகள்
இறப்புஏப்ரல் 20, 2000(2000-04-20) (அகவை 92)
கொலம்பசு, ஓகியோ, அமெரிக்க ஒன்றிய நாடுகள்
தேசியம்அமெரிக்கர்
துறைவானியலாளர்
பணியிடங்கள்யெர்க்கேசு வான்காணகம், பெர்க்கின்சு வான்காணகம்

கீனான் ஓர் அமெரிக்க கதிர்நிரலியலாளர். இவர் வில்லியம் வில்சன் மார்கன், எஇத் கெல்மன் (1911–2007) ஆகியோருடன் இணைந்து 1939 முதல்1943 வரை ஆய்வு செய்து MKKஎன்ற விண்மீன் கதிர்நிரல் வகைபாட்டை உருவாக்கினார். இந்த இருபருமான (வெப்பநிலை, ஒளிர்திறன்) வகைபாட்டமைப்பு பிறகு1973இல் மார்கனாலும் கீனானாலும் திருத்தியமைக்கப்பட்டது. இன்றும் இந்த மார்கன்-கீனான் வகைபாட்டமைப்பு வழக்கில் உள்ளது.

அவர்களது நீண்டகால ஆய்வில் கீனான் சூரியனைவிடக் குளிர்வான விண்மீன்களுக்குக் கவனம் செலுத்த, மார்கன் சூரியனைவிடச் சூடான வின்மீன்களின்பால் கவனம் செலுத்தினார். கீனான் நெடுங்காலத்துக்கு ஆய்வு செய்து 1999இல் 70 விண்மீன்களுக்கான தகவல்களை இறுதி ஆய்வுரையில் வெளியிட்டார்.

தகைமைகள்

தொகு

இவரது பெயரிடப்பட்டவை

மேற்கோள்கள்

தொகு

Mary Woods Scott, "Philip Childs Keenan", in Hockey et al. eds., Biographical Encyclopedia of Astronomers (Springer 2007)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிலிப்_சைல்ட்சு_கீனான்&oldid=4025265" இலிருந்து மீள்விக்கப்பட்டது