பிலிப் லுட்விக் இசுடேடியசு முல்லர்
பிலிப் லுட்விக் இசுடேடியசு முல்லர் (Philipp Ludwig Statius Müller)(25 ஏப்ரல் 1725 - 5 சனவரி 1776) ஒரு ஜெர்மனி விலங்கியல் நிபுணர் ஆவார்.
முல்லர் எசென்சில் 1725ஆம் ஆண்டு பிறந்தார். எர்லாங்கனில் இயற்கை அறிவியல் பேராசிரியராக பணியாற்றினார். 1773 மற்றும் 1776க்கு இடையில், லின்னேயஸின் நேச்சர்சிஸ்டத்தின் ஜெர்மன் மொழிபெயர்ப்பை வெளியிட்டார்.[1] 1776ஆம் ஆண்டின் துணை பதிப்பு, ஆவுளியா, குவானக்கோ, போட்டோ, மூன்று நிற ஹெரான், குடை கொண்டைக்கிளி, செங்குத கொண்டைக்கிளி மற்றும் வெடிற்போத்து உள்ளிட்ட பல உயிரினங்களுக்கான அறிவியல் வகைப்பாட்டைக் கொண்டிருந்தது. இவர் ஒரு பூச்சியியல் வல்லுநராகவும் இருந்தார்.[2]
முல்லர் எர்லாங்கனில் இறந்தார்.
பிலிப் லுட்விக் இசுடேடியசு முல்லரை, சாலமன் முல்லர் (1804-1864), பறவையியல் நிபுணர் அல்லது ஓட்டோ பிரெட்ரிக் முல்லருடன் குழப்பமடையக்கூடாது.
பணி
தொகு- Statius Müller, P. L. 1776. Des Ritters Carl von Linné Königlich Schwedischen Leibarztes &c. &c. vollständigen Natursystems Supplements- und Register-Band über alle sechs Theile oder Classen des Thierreichs. Mit einer ausführlichen Erklärung. Nebst drey Kupfertafeln.Nürnberg. (Raspe).