பில்லிடைட்டு
யுரேனைல் ஐதராக்சைடு கனிமம்
பில்லிடைட்டு (Billietite) என்பது ஓர் அசாதாரணமான யுரேனியக் கனிமமாகும். இக்கனிமத்தில் பேரியம் கலந்துள்ளது. பில்லிடைட்டின் மூலக்கூறு வாய்ப்பாடு Ba(UO2)6O4(OH)6•8H2O. என்பதாகும். பொதுவாக தெளிவான மஞ்சள் நிறத்தில் செஞ்சாய்சதுரப் படிகங்களாக இது தோன்றுகிறது.[3] பெல்சியம் நாட்டின் கெண்ட்டு நகரத்திலுள்ள கெண்ட்டு பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த படிகவியலாளரான வலேரே லூயிசு பில்லியெட்டு (1903-1944) என்பவரின் நினைவாக இக்கனிமத்திற்கு பில்லிடைட்டு எனப் பெயரிடப்பட்டது.
பில்லிடைட்டு Billietite | |
---|---|
பெக்கரெலைட்டு (மஞ்சள்) மற்றும் பில்லியடைட்டு (ஆரஞ்சு) | |
பொதுவானாவை | |
வகை | ஆக்சைடு கனிமம் |
வேதி வாய்பாடு | Ba(UO2)6O4(OH)6•8H2O |
இனங்காணல் | |
நிறம் | மஞ்சள் வகைகள் |
படிக அமைப்பு | செஞ்சாய்சதுரம் |
பிளப்பு | சமபிளவு {001}, சமமற்ற பிளவு {110} மற்றும் {010} |
விகுவுத் தன்மை | உடையும் |
மிளிர்வு | அடமண்டைன் |
ஒளிஊடுருவும் தன்மை | ஒளி புகும், ஒளி கசியும் |
அடர்த்தி | 5.28 - 5.36 g/cm3 |
பிற சிறப்பியல்புகள் | கதிரியக்கம் |
மேற்கோள்கள் | [1][2] |
காங்கோ சனநாயகக் குடியரசின் ஆட்-கடங்கா மாகாணத்தில் உள்ள சிங்கோலோப்வே கனிமத்துடன் சேர்ந்து யுரேனியம் சுரங்கத்தின் பகுதியில் பில்லிடைட்டு முதன் முதலாகக் கண்டுபிடிக்கப்பட்டது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ Mineralienatlas
- ↑ 2.0 2.1 Mindat.org - Billietite
- ↑ M. Katherine Pagoaga, Daniel E, Appleman, & James M. Stewart "Crystal structures and crystal chemistry of the uranyl oxide hydrates becquerelite, billietite, and protasite" American Mineralogist, Volume 72, pages 1230-1238, 1987 [1]