பிளப்பர் (flubber) என்பது ஒரு வகையான பருப்பொருள் ஆகும். இதன் பெயர் "தி ஆப்சென்ட் மைன்டெட் புரஃபசர்" (The Absent-Minded Professor) என்ற படத்தைச் சார்ந்து உருவாக்கப்பட்டது. பொதுவாக போரோன் குறுக்கு-இணைவு வினை (cross-linking) மூலம் உருவாகும் பாலிவினைல் ஆல்ககால் (Polyvinyl alcohol-PVA) இரப்பர் நெகிழி கிலார்ப் (glorp), கிலர்ச் (glurch), அல்லது சிலைம் (slime) என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. பாலிவினைல்-அசிட்டேட் அடிப்படையிலான பசைகள், போராக்சு ஆகியவற்றிலிருந்து பிளப்பர் உருவாக்க முடியும்.[1]

பச்சை நிற உணவு நிறமி சேர்க்கப்பட்ட பிளப்பர் நெகிலி.  இந்த நெகிலி பொதுவாக நிறமற்றது.

வினைகள்

தொகு

களியாக்கல் செயல்முறையானது பி.வி.ஏ.யின் சங்கிலிகளை குறுக்காக இணைக்கும் ஒரு போரேட்டு எசுத்தர் உருவாகிறது.[2] போரேட்டு எசுத்தர்கள், ஐதராக்சைல் மற்றும் B-OH தொகுதியுடன் உடனடியாக ஒடுங்குவதால் உருவாக்கப்படுகின்றது.[3]

 
"Slime" இல் குறுஇணைவை உள்ளடக்கிய போரேட்டு எசுத்தர் அமைப்பு.

பண்புகள்

தொகு

பிளப்பர் என்பது நியூட்டானியத் திரவம் அல்லாத ஒன்றாகும் (non-Newtonian fluid). அது குறைந்த அழுத்தத்தின் கீழ் பாயும் திறனுடையது. ஆனால், அதிக தகைவு மற்றும் அதிக அழுத்தத்தில் உடையும் தன்மையுடையது. திண்மம் மற்றும் திரவம் ஆகிய இரண்டின் பண்புகளையும் கொண்டுள்ள இந்தக் கலவையானது மேக்சுவெல் திண்மம் போன்ற பண்பைப் பெற்றுள்ளது. மேலும், அது நீளும் நெகிழி (viscoplastic) அல்லது களியின் பண்பைப் பெற்றுள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. University, Carnegie Mellon. "Polyvinyl Alcohol Slime - Gelfand Center - Carnegie Mellon University". www.cmu.edu (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-11-01.
  2. Cassassa, E. Z.; A. M. Sarquis; C. H. Van Dyke (January 1986). "The Gelation of Polyvinyl Alcohol with Borax". Journal of Chemical Education 63 (1): 57. doi:10.1021/ed063p57. https://archive.org/details/sim_journal-of-chemical-education_1986-01_63_1/page/57. 
  3. Katoa, Y.; K. Suwaa; S. Yokoyamab; T. Yabeb; H. Ikutaa; Y. Uchimotoa; M. Wakihara (December 2002). "Thermally stable solid polymer electrolyte containing borate ester groups for lithium secondary battery". Solid State Ionics 152–153: 155–159. doi:10.1016/s0167-2738(02)00370-3. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிளப்பர்&oldid=4047920" இலிருந்து மீள்விக்கப்பட்டது