பிளம்பைட்டு

எதிர்மின் அயனி

பிளம்பைட்டு (Plumbite) என்பது PbO2−2 என்ற ஆக்சியெதிர்மின் அயனியைக் கொண்டிருக்கும் எந்தவொரு உப்பையும் குறிக்கும். இந்த உப்புகளில் ஈயம் +2 என்ற ஆக்சிசனேற்ற நிலையில் காணப்படுகிறது. பிளம்பேட்டு(II) என்ற ஐயுபிஏசி பெயருக்கு பாரம்பரியமாக பிளம்பைட்டு என்ற பெயர் வழங்கப்பட்டு வந்தது.

உதாரணமாக ஈய(II) ஆக்சைடு (PbO) நீர்க்காரத்தில் கரைந்து HPbO2 என்ற எதிர்மின் அயனியைக் கொண்ட உப்பை உருவாக்குகிறது. :[1]

PbO + OH → HPbO2

ஈய(II) ஐதராக்சைடும் மிகையளவு நீர்க்காரத்தில் கரைந்து Pb(OH)4−6 என்ற எதிர்மின் அயனியைத் தருகிறது.

Pb(OH)2 + 4 OH → Pb(OH)4−6

பிளம்பைட்டு அயனி ஒரு வலிமை குறைந்த ஒடுக்கும் முகவராகும். இம்முகவராகச் செயல்படும் போது இது பிளம்பேட்டாக ஆக்சிசனேற்றம் அடைகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. Amit Arora (2005). Text Book Of Inorganic Chemistry. Discovery Publishing House. pp. 450–452. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-8356-013-X.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிளம்பைட்டு&oldid=4168933" இலிருந்து மீள்விக்கப்பட்டது