ஈய(II) ஐதராக்சைடு

ஈய(II) ஐதராக்சைடு (Lead(II) hydroxide) என்பது , Pb(OH)2, என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ஈயத்தின் ஐதராக்சைடான இச்சேர்மத்தில் ஈயம் +2. என்ற ஆக்சிசனேற்ற நிலையில் உள்ளது. இந்த எளிய சேர்மம் இயற்கையில் இருப்பதற்கான வாய்ப்பு தொடர்பாக ஐயமே உள்ளது [4]. ஈய அடிப்படை கார்பனேட்டு (PbCO3•2Pb(OH)2) அல்லது ஈய(II) ஆக்சைடு (PbO) சேர்மங்கள் நடைமுறையில் காணப்படுகின்றன. கடந்த காலத்தில் இச்சேர்மங்களின் இருப்பும் ஈய(II) ஐதராக்சைடு இல்லாமை குறித்த குழப்பங்கள் நிலவின.

ஈய(II) ஐதராக்சைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
ஈயம்(II) ஐதராக்சைடு
வேறு பெயர்கள்
ஈய ஐதராக்சைடு
பிளம்பசு ஐதராக்சைடு
இனங்காட்டிகள்
[1] 1319-46-6[1] N
ChemSpider 8035300 Y
InChI
  • InChI=1S/2H2O.Pb/h2*1H2;/q;;+2/p-2 Y
    Key: VNZYIVBHUDKWEO-UHFFFAOYSA-L Y
  • InChI=1/2H2O.Pb/h2*1H2;/q;;+2/p-2
    Key: VNZYIVBHUDKWEO-NUQVWONBAE
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 9859601
SMILES
  • [OH-].[OH-].[Pb+2]
பண்புகள்
Pb(OH)2
வாய்ப்பாட்டு எடை 241.21 கிராம்/மோல்
தோற்றம் வெண் தூள்
அடர்த்தி 7.41 கிராம்/செ.மீ3 [2]
உருகுநிலை 135 °C (275 °F; 408 K) (சிதைவடையும்)
0.0155 கிராம்/100 மி.லி (20 °செல்சியசில்)[3]
1.42 x 10−20
கரைதிறன் அமிலம் மற்றும் காரங்களில் கரையும்;
அசிட்டோன் மற்றும் அசிட்டிக் அமிலம் போன்றவற்றில் கரையாது.
தீங்குகள்
ஈயூ வகைப்பாடு விஷம் T
R-சொற்றொடர்கள் R25
S-சொற்றொடர்கள் (S1/2) S20/21 S29/56 S45
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

தயாரிப்பு தொகு

ஈய(II) உப்புடன் ஓர் ஐதராக்சைடை சேர்க்கும்போது ஒரு நீரேற்றம் பெற்ற ஈய ஆக்சைடு PbO•xH2O ( x < 1) கிடைக்கிறது. ஈய(II) அசிட்டேட்டை கரைசலை கவனத்துடன் நீராற்பகுத்து 6PbO•2H2O = Pb6O4(OH)4 என்ற வாய்ப்பாட்டைக் கொண்ட படிக விளைப்பொருளை தயாரிக்கலாம் [5]. கொத்துச் சேர்மமாக கிடைக்கும் இதில் ஈய மையங்கள் எண்முகத்தில் காணப்படுகின்றன. இவற்றின் ஒவ்வொரு முகத்தின் உச்சியிலும் ஓர் ஆக்சைடு அல்லது ஓர் ஐதராக்சைடு காணப்படுகிறது. எண்முகக் கொத்தின் Mo6S8 கிளை அலகை நினைவூட்டுவதுபோல் இக்கட்டமைப்பு உள்ளது [6].

வினைகள் தொகு

கரைசல் நிலையில் ஈய(II) ஐதராக்சைடு கிட்டத்தட்ட ஒரு பலவீனமான அமில நிபந்தனைகளில் இது காரமாக Pb2+ அயனியை உருவாக்குகிறது. இந்த நேர்மின் அயனி நீராற்பகுப்புக்கு உட்படுகிறது. கார நிபந்தனைகள் விருத்தியடைகின்றன. Pb(OH)+, Pb(OH)2 , Pb(OH)3− இனங்கள் உள்ளிட்டவை உருவாகின்றன. மேலும் பலவணு இனங்களான Pb4(OH)44+, Pb3(OH)42+, Pb6O(OH)64+. போன்ற இனங்களும் உருவாகின்றன [5].

ஈய ஐதரேட்டு தொகு

கடந்த காலத்தில் ஈய நீரேற்று என்ற பெயர் சொல்லும் பயன்படுத்தப்பட்டு வந்ததாக அறியப்படுகிறது. ஆனால் இச்சொல் Pb(OH)2 அல்லது PbO•xH2O. என்பதில் எதைக் குறிப்பிட பயன்படுத்தப்பட்டது என்பதில் தெளிவில்லை [7][8].

மேற்கோள்கள் தொகு

  1. http://www.commonchemistry.org/ChemicalDetail.aspx?ref=1319-46-6&terms=lead(II)+hydroxide
  2. Pradyot Patnaik. Handbook of Inorganic Chemicals. McGraw-Hill, 2002, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-07-049439-8
  3. Handbook of Chemistry and Physics, 1st edition, 2000, CRC Press பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-0740-6
  4. G. Todd and E. Parry (1964). "Character of Lead Hydroxide and Basic Lead Carbonate". Nature 202 (4930): 386–387. doi:10.1038/202386a0. 
  5. 5.0 5.1 Von Egon Wiberg, Nils Wiberg, Arnold Frederick Holleman, "Inorganic Chemistry", Academic Press, 2001 (Google books).
  6. R. A. Howie; W. Moser (1968). "Structure of Tin(II) "Hydroxide" and Lead(II) "Hydroxide". Nature 219: 372–373. doi:10.1038/219372a0. 
  7. http://www.google.com/patents/US527830
  8. http://www.google.com/patents/US496109

புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈய(II)_ஐதராக்சைடு&oldid=2484225" இலிருந்து மீள்விக்கப்பட்டது