பிளாங்கோ மறுமலர்ச்சி அருங்காட்சியகம், உபுத்
பிளாங்கோ மறுமலர்ச்சி அருங்காட்சியகம் (Blanco Renaissance Museum) இந்தோனேசியாவின் பாலி நகரில் உபுத் நகரில் அமைந்துள்ள ஒரு அருங்காட்சியகமாகும். இந்த அருங்காட்சியகம் 28 டிசம்பர் 1998 ஆம் நாளன்று திறந்து வைக்கப்பட்டது.[1]
நிறுவப்பட்டது | 28, 1998 |
---|---|
அமைவிடம் | உபுத், பாலி, இந்தோனேசியா |
வலைத்தளம் | blancomuseum |
வரலாறு
தொகுபிளாங்கோ மறுமலர்ச்சி அருங்காட்சியகம் மறைந்த டான் அன்டோனியோ பிளாங்கோவின் வீட்டு காட்சிக்கூடம் மற்றும் ஸ்டுடியோ ஆகும். பிலிப்பைன்ஸில் பிறந்த மேஸ்ட்ரோ நிர்வாண பாலினிய பெண்களின் லித்தோகிராஃபிக் கலைப்படைப்புகளுக்கு பெயர் பெற்றவர் ஆவார். காம்பூஹனின் பசுமையான பள்ளத்தாக்கைக் கண்டு ரசிக்கின்ற வகையில் அதன் எதிராக ஒரு மலையடிவாரத்தில் இந்த பிளாங்கோ மறுமலர்ச்சி அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் பிளாங்கோ மற்றும் அவரது மகன் மரியோவின் ஓவியங்கள், பிளாங்கோ மறுமலர்ச்சி அருங்காட்சியகத்தின் முதன்மைக் கட்டடத்தில் நுழையும்போது அங்கு ஒரு பளிங்கு மண்டபத்தைக் காணலாம். அது ஆரம்பரமாகவும், வழக்கத்திற்கு மாறான சட்டங்களைக் கொண்டும் அமைந்துள்ளன. பல வண்ணமயமான நிர்வாண புகைப்படங்கள் இந்த அறையில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. ஸ்டியோவிற்குள் உள்ளே செல்லும்போது பல வகையான 1960களைச் சேர்ந்த பலவகைப் புகைப்படங்கள் கொண்ட புகைப்படக்கலவையினைக் காணலாம். மேலும் அங்கு ஓவியம் தீட்டுவதற்கு பயன்படுத்தப்படுகின்ற தூரிகைகளும், உலர்ந்த வண்ணங்களும், வழக்கமாக ஓவியத்தை தீட்டும்போது காணப்படுகின்ற சூழலில் அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள கலைப்பொருள்களில் சில கலைப் பொருள்கள் பார்வையாளர்களின் முகத்தில் ஒரு புன்னகையைத் தரும். அதே சமயம் சில கலைப்பொருள்கள் லேசான பயத்தைத் தூண்டும் வகையில் அமைந்துள்ளன. ஆபாச இதழ்களின் பக்கங்கள் சோப் பெட்டிகளாலும், கடல் சங்குகளாலும் மூடப்பட்ட நிலையில் அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். பிளாங்கோ வழக்கமாக ஓவியங்களைத் தீட்டுகின்ற ஸ்டுடியோ, மாரியோவின் கலைப் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ள காட்சிக்கூடம் ஆகியவற்றை பிளாங்கோ மறுமலர்ச்சி அருங்காட்சியகத்தில் பார்வையாளர்கள் காணமுடியும். மேலும் அங்கு அன்பளிப்புபொருள்கள் விற்கின்ற கடை, சிற்றுண்டி விடுதி மேலும் பிளாங்கோ குடும்பத்தினரின் கோயில் அந்த அருங்காட்சியக வளாகத்தில் அமைந்துள்ளன. அந்த வளாகத்தில் உள்ள சிற்றுண்டி விடுதியானது வசதியான பாலியின சூழலைத் தரும். அந்த சிற்றுண்டி விடுதியில் ஐரோப்பிய மற்றும் ஆசிய உணவு வகைகள் பரிமாறப்படுகின்றன. இந்த அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள கலைப்பொருள்கள் பெரியவர்களையும், கலை ஆர்வலர்களையும் கவர்ந்து இழுக்கும் வகையில் அமைந்துள்ளன. குழந்தைகளோடு செல்லும் பார்வையாளர்கள் அந்த அருங்காட்சியக வளாகத்தில் உள்ள அருமையான தோட்டத்தையும் முற்றத்தையும் நன்கு ரசிக்க முடியும். அங்கு அழகான கிளி உள்ளிட்ட பலவகையான பறவைகள் காணப்படுகின்றன.[2]
சேகரிப்புகள்
தொகுபிளாங்கோ மறுமலர்ச்சி அருங்காட்சியகத்தின் உரிமையாளரும் நிறுவனருமான அன்டோனியோ பிளாங்கோ, பெண்களை சித்தரிக்கும் கலைப்படைப்புகளை உருவாக்குவதை விரும்பினார். தனது படைப்புகளை உருவாக்குவதற்காக அன்டோனியோ பிளாங்கோ தனது மனைவியை ஒரு மாதிரியாகப் பயன்படுத்திக் கொள்ள ஆரம்பித்தார். அவரது மனைவி ஒரு பாலினிய நடனக் கலைஞர் ஆவார். அவருடைய பெயர் நி ரோன்ஜி என்பதாகும். அதன் பிறகு, அவர் தனது கலைப்படைப்புகளை தனது கனவாகக் காண ஆரம்பித்தார். மேலும் அவர் தனது கலை சேகரிப்புக்கான இடமாக தனது சொந்த வீட்டைக் கட்டினார். இந்த கலை அருங்காட்சியகத்தை கட்ட வேண்டும் என்பதே அவரது இலக்காக இருந்தது, இதனால் அவர் 1998 டிசம்பர் 28 ஆம் நாளன்று தன் வீட்டை ஒரு அருங்காட்சியகமாக மாற்றினார். பின்னர் பிளாங்கோ மறுமலர்ச்சி அருங்காட்சியகம் என்ற சிறப்பினைப் பெற்று நிறுவப்பட்டது. அந்த அருங்காட்சியக வளாகத்தின் முழு இடத்திலும் தற்போது 300 க்கும் மேற்பட்ட ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பிளாங்கோ தனது 87 ஆம் வயதில், 10 டிசம்பர் 1999 ஆம் நாளன்று இயற்கையெய்தினார்.[3]
பார்வை நேரம்
தொகுஇந்த அருங்காட்சியகம் ஜலான் ராயா கம்புகான், உபுத், ஜியான்யார், பாலி 80571, இந்தோனேசியா என்ற முகவரியில் அமைந்துள்ளது. பார்வையாளர்கள் இந்த அருங்காட்சியகத்தினை தினமும் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை பார்வையிடலாம்.[2]
இலக்கியம்
தொகு- Lenzi, Iola (2004). Museums of Southeast Asia. Singapore: Archipelago Press. p. 35. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 981-4068-96-9.
குறிப்புகள்
தொகு- ↑ "History". Blancomuseum.com. பார்க்கப்பட்ட நாள் July 5, 2016.
- ↑ 2.0 2.1 Blanco Renaissance Museum in Bali
- ↑ Blanco Renaissance Museum: A Handy Guide To Explore This Unique Place In Bali
வெளி இணைப்புகள்
தொகு