பிள்ளைத்தக்காளி
Cape gooseberry | |
---|---|
Cape gooseberry flower | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | P. peruviana
|
இருசொற் பெயரீடு | |
Physalis peruviana L. | |
வேறு பெயர்கள் [1] | |
|
பிள்ளைத்தக்காளி (Physalis peruviana) என்பது ஒரு தாவரமாகும். இதன் தாயகம் பெரு ஆகும். இதன் தாவரப் பெயர் பைசாலிஸ் பெருவியானா என்பதாகும். இது தமிழகத்திள்ள நீலகிரி மலைப்பகுதிகளில் நன்கு விளைகிறது. இச்செடி 45 முதல் 90 செ.மீ உயரம் வளரும் தன்மை கொண்டது. இப்பழத்திலிருந்து பழக்கூட்டு செய்யலாம். இது விதை மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. இதன் பழங்கள் சனவரி - மே மாதங்களில் கிடைக்கும். ஒரு எக்டரில் 20,000 கிலோ பழங்கள் கிடைக்கும்.
சத்துகள்
தொகுநூறு கிராம் பழத்தில் உள்ள சத்துகள் (கிரமில்)
- புரதம் 1.8
- கொழுப்பு 0.2
- நார்ப்பொருள் 3.2
- மாவுப் பொருள் 11.1
- கால்சியம் 0.01
- பாஸ்பரஸ் 0.067
- இரும்பு 0.002
மருத்துவப் பண்புகள்
தொகு- இப்பழம் சிறுநீரைப் பெருக்கி சிறுநீர் பாதையை சுற்றம் செய்கிறது. இதனால், சீறுநீர் பாதையில் ஏற்படும் எரிச்சல் குணமாகிறது. இச்செடியின் இலையை நெருப்பனலில் வாட்டி வீக்கத்தின்மீது போட வீக்கம் கரைந்து குணமாகும்.[2]
- இப்பழத்தை நாம் உணவில் எடுத்துக்கொண்டால் நம் கல்லீரலில் உள்ள கழிவுகளை நன்கு சுத்தம் செய்து நல்ல ஆரோக்கியமான செல்களை உருவாக்கி ஆரோக்கியமான கல்லீரலாக மாற்றும் வல்லமை கொண்டது.
- நுரையீரல் புற்றுநோயை குணப்படுத்தும் வல்லமை கொண்டது.
- எக்ஸிமா (eczema) என்று சொல்லக்கூடிய தோல் அரிப்பை குணப்படுத்தும்.
இதில் உள்ள ஃபிளாவினோய்ட் (flavinoid) என்ற பொருள் நல்ல Antioxidant (கிருமிகளை எளிதில் அழிக்க கூடியது ) ஆக உள்ளது.
- இதில் உள்ள புரத, நார், கொழுப்பு மற்றும் இரும்பு முதலிய சத்துக்கள் நம் உடலுக்கு நல்ல நோயெதிரிப்பு சக்தியை (immunity power)வழங்குகிறது.
அத்துடன், பால்வினை நோய்களையும் குணப்படுத்துகிறது.
- நல்ல நோயெதிர்ப்பு சக்தியை(immunity ) நம் உடலுக்கு வழங்குகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "The Plant List: A Working List of All Plant Species". பார்க்கப்பட்ட நாள் 14 December 2014.
- ↑ அர்ச்சுணன் (செப்டம்பர் 2008). மருத்துவத்தில் காய்கனிகள். நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பி லிட், அம்பத்தூர். pp. 57, 58.
{{cite book}}
: Check date values in:|year=
(help)