பிள்ளை லோகஞ்சீயர்
பிள்ளை லோகஞ்சீயர் என்பவர் வைணவ வரலாறுகள் பலவற்றை எழுதியவர். 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். மணிப்பிரவாள நடையில் கிரந்த எழுத்துக்களுடன் சில தமிழ் நூல்களும், வடமொழி நூல்களும் எழுதியவர்.
- எழுதிய நூல்கள்
- இராமானுசார்ய திவ்ய சரிதை
- யதீந்திரப் பிரணவப் பிரபாவம் (மணவாள மாமுனிகள் வரலாறு)
- திருவரங்கத்தமுதனார் செய்த இராமானுச நூற்றந்தாதி நூலுக்கு வியாக்கியானம்
- பிள்ளை லோகாசாரியார் எழுதிய உரைநடை நூல் ‘அர்த்த பஞ்சகம்’ என்பதற்கு வியாக்கியானம்.
- பிள்ளை லோகாசாரியர் மாணாக்கர் விளாஞ்சோலைப் பிள்ளை செய்த நூல் ‘சப்த காதை’ என்பதற்கு வியாக்கியானம்
- மணவாள மாமுனிகள் பாடிய நூல்களுக்கு வியாக்கியானம்
- உபதேச ரத்தின மாலை
- ஆர்த்திப் பிரபந்தம்
- திருவாய்மொழி நூற்றந்தாதி உரை
- ஸ்ரீ வைஷ்ணவ சமயாசார நிஷ்கர்ஷம் (தனி உரைநடை நூல்)
- நாலாயிர திவ்வியப் பிரபந்தம் தனியன்கள் வியாக்கியானம்
- உபதேசத் திருநாமம்
- திருமந்திரார்த்த அரும்பத விளக்கம்
கருவிநூல்
தொகு- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பாகம் 3, 2005