பிவண்டி-நிஜாம்பூர் மாநகராட்சி


பிவண்டி-நிஜாம்பூர் மாநகராட்சி (Bhiwandi-Nizampur City Municipal Corporation) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் தானே மாவட்டத்தில் அமைந்த மாநகராட்சிகளில் ஒன்றாகும். இம்மாநகராட்சி பிவண்டி-நிஜாம்பூர் எனும் இரட்டை நகரங்களைக் கொண்டது. 84 வார்டுகள் கொண்ட பிவண்டி-நிஜாம்பூர் மாநகராட்சி 2002-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இதன் நிர்வாகத் தலைமையிடம் பிவண்டியில் உள்ளது. 2011-ஆம் ஆண்டில் இமமாநகராட்சியின் மக்கள் தொகை 7,09,665[1]

பிவண்டி-நிஜாம்பூர் மாநகராட்சி (BNCMC)
வகை
வகை
வரலாறு
தோற்றுவிப்பு2002
தலைமை
மேயர்
பிரதிபா விலாஸ் பாட்டீல்
ஆணையாளர்
சுதாகர் விஷ்ணு தேஷ்முக்
உறுப்பினர்கள்84
தேர்தல்கள்
அண்மைய தேர்தல்
2017
வலைத்தளம்
Visit Website

மக்கள் தொகை பரம்பல் தொகு

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 84 வார்டுகள் கொண்ட பிவண்டி-நிஜாம்பூர் மாநகராட்சியின் மொத்த மக்கள் தொகை 7,09,665 ஆகும். மக்கள் தொகையில் ஆண்கள் 4,15,339 மற்றும் 2,94,326 பெண்கள் ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 709 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை 91,825 - 12.94 % ஆகும். சராசரி எழுத்தறிவு 79.48 % ஆகும். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 39.34%, இசுலாமியர்கள் 56.01%, பௌத்தர்கள் 1.55%, சமணர்கள் 2.66%, கிறித்துவர்கள் 0.23% மற்றும் பிறர் 0.16% ஆக உள்ளனர்.[2]

மேற்கோள்கள் தொகு

  1. "Bhiwandi Nizampur City Population Census 2011". Census 2011 India. Census Organization of India. பார்க்கப்பட்ட நாள் 10 July 2015.
  2. Bhiwandi Nizampur Population Census 2011

வெளி இணைப்புகள் தொகு