பிஷப் ஜான்சன் நினைவு மேல்நிலைப் பள்ளி, தரங்கம்பாடி

தமிழ் சுவி சேஷ லுத்தரன் திருச்சபை பிஷப் ஜான்சன் நினைவு மேல்நிலைப் பள்ளி என்பது தமிழ்நாட்டின், நாகை மாவட்டம், தரங்கம்பாடியில் உள்ள ஒரு மேல்நிலைப் பள்ளி ஆகும்.

பிஷப் ஜான்சன் நினைவு மேல்நிலைப் பள்ளி

பள்ளியின் சிறப்பு தொகு

இந்தப் பள்ளியானது தமிழுக்குத் தொண்டாற்றிய சீகன் பால்க் வாழ்ந்த வீட்டின் அருகில் உள்ளது. இந்தியாவில் பெண்களுக்காக தொடங்கப்பட்ட முதல் பள்ளி இதுதான் என்பது குறிப்பிடப்பட்டது.

வரலாறு தொகு

இப்பள்ளியானது 1708 இல் திண்ணைப் பள்ளியாக தொடங்கப்பட்டு, 1714 இல் துவக்கப் பள்ளியாக மாறியது, 1952 இல் உயர்நிலைப் பள்ளியாகவும் பின்னர் மேல்நிலைப் பள்ளியாகவும் தரம் உயர்த்தப்பட்டு 2018 காலகட்டத்தில் 300 மாணவர்களுடன் செயல்பட்டு வருகிறது. இங்கு பெரும்பாலும் கிராமப்புற மாணவர்களே படிக்கின்றனர்.[1]

மேற்கோள்கள் தொகு

  1. வீ.தமிழன்பன் (5 ஏப்ரல் 2018). "310 வயது பள்ளியும்.. பாரம்பரிய கலைகள் மீட்பும்!: தன்னலமற்ற தலைமையாசிரியரின் முயற்சி". கட்டுரை. தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 6 ஏப்ரல் 2018. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)